Home>>மன்னார்குடி>>பராமரிப்பில்லாமல் இருக்கும் மன்னார்குடி கல்கி சிறுவர்கள் பூங்கா
மன்னார்குடிவிளையாட்டு

பராமரிப்பில்லாமல் இருக்கும் மன்னார்குடி கல்கி சிறுவர்கள் பூங்கா

இன்று (23/09/2021) மாலை மன்னார்குடி கல்கி சிறுவர்கள் பூங்காவிற்கு சென்றிருந்தேன். ஓரிரு ஆண்டுகள் முன் நல்ல நிலையில் இருந்தது, ஆனால் தற்பொழுது எந்த பராமரிப்பும் இல்லாமல் கல்கி சிறுவர் பூங்கா சிதிலமடைந்து வருகிறது. மேலும் அங்குள்ள உள்ள சில விளையாட்டு உபகரணங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் அங்கு விளையாடும் சிறுவர், சிறுமிகளுக்கு விபத்து ஏற்பட கூடிய நிலையும் உள்ளது. இவைகளை கவனத்தில் கொண்டு உரிய அலுவலர்கள் உடனடியாக சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.

அதன் படங்கள் தங்கள் பார்வைக்கு…


செய்தி:
திரு. துரை,
மன்னார்குடி.

Leave a Reply