Home>>செய்திகள்>>மேட்டூர் சூப்பர் சார்வீசின் (MSS) ஒழுங்கீனம்
செய்திகள்தமிழ்நாடுவணிகம்

மேட்டூர் சூப்பர் சார்வீசின் (MSS) ஒழுங்கீனம்

பெரம்பலூர் அருகே கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் சிறு விவசாயி செல்லதுரை.
இயற்கை சீற்றங்களை எல்லாம் எதிர்கொண்டு சிரமத்தோடு சின்ன வெங்காயம் விதைத்து அறுவடை செய்திருந்தார்.

எனக்கு அறிமுகமான விவசாயி என்பதால் 50 கிலோ வெங்காயம் கேட்டிருந்தேன். மறுநாளே வெங்காய மூடையை காற்றுபுகும் சிகப்பு சல்லடை பையில் போட்டு தன் கிராமத்திலிருந்து பெரம்பலூர் வந்து மேட்டூர் சூப்பர் சர்வீசில் நாகர்கோவிலுக்கு பதிவு செய்துவிட்டார். அதற்கான வாடகை கட்டணமாக 210 ரூபாய் தொகையும் செலுத்தி விட்டார். வெங்காய மூடை மறுநாளே நாகர்கோயில் சென்றுவிடும் என்று உறுதி அளித்து காசை வாங்கி கல்லாவில் போட்டு கொண்டனர் பெரம்பலூர் MSS நிறுவனத்தினர். நான்கு நாட்கள் கடந்தும் பார்சல் நாகர்கோவில் வரவில்லை.

நாகர்கோவில் MSSல் கேட்டால் நீங்க பெரம்பலூர் அலுவலகத்தில்தான் கேட்கனும் என்று சொல்லிவிட்டனர். பெரம்பலூருக்கு தொலைப்பேசி வழியாக அழைத்து பேசினால், மூட்டை திருச்சியில் இருக்கு வந்திடும் என்றனர். மறுநாளே போய் சேர்ந்திடும்னுதானே புக் பண்ணுனீங்க இப்போ நாலு நாள் ஆகுது சாகவாசமா வந்திடும்னு சொல்றீங்க… வெங்காயம் அழுகிவிடும். உடனே பார்சல் கிடைக்க ஏற்பாடு செய்ங்க என்றதும் போனை துண்டித்து விட்டனர்.

அக்டோபர் 3ம் தேதி ஆறு நாட்கள் ஆகியும் பொருள் வந்து சேரவில்லை. எங்குமே சரியான பதில் இல்லை. இறுதியாக தலைமை அலுவலக புகார் எண்ணான 9443310770 என்ற எண்ணிற்கு பலமுறை முயற்சித்து இறுதியாக ஒரு பெண்மணி போனை எடுத்தார். விவரத்தை சொன்னேன். சரிங்க அரைமணி நேரத்தில் உங்களை அழைக்கிறேன் என்றவர் பிறகு போனையே எடுக்கவில்லை. மறுநாள் அழைத்த பொழுதும் பரிசோதித்துவிட்டு இதோ அரைமணி நேரத்தில் சொல்கிறேன் என்றவர் தொடர்பில் வரவே இல்லை. கடைசி வரை என் அழைப்பையும் ஏற்கவே இல்லை.

வேறு எண்ணிலிருந்து கூப்பிட்டதும் அழைப்பை எடுத்தவரிடம்… “ஏன்மா.. ஒரு புகார் சொன்னா அதுக்கு பதில் சொல்லாம இப்படியா பொறுப்பில்லாம நடந்துப்பீங்க. ஏழு நாட்களாகியும் வெங்காய மூட்டை வந்து சேரவில்லை, உங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லையென்றால் உங்கள் நிறுவன பொறுப்பாளர் எண்ணோ அல்லது மேலாளர் எண்ணோ கொடுங்க நான் பேசிக்கிறேன் என்றதும், அரைமணி நேரத்தில் தருகிறேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டார். பிறகு என் குரலை கேட்டாலே அழைப்பை துண்டித்து விடுவார்.

ஒரு வழியாக செப்டம்பர் 28ம் தேதி பதிவு செய்த வெங்காய மூட்டை பத்து நாட்கள் கடந்து அக்டோபர் 7ம் தேதி இரவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தது. சிகப்பு கோணி காற்று புகாத வெள்ளை கோணியாக மாறி இருந்தது. வெங்காயம் அழுகிப்போய் வந்து சேர்ந்தது. நான் எடுத்துக்கொள்ள மாட்டேன், உங்க MSS முதலாளிகிட்டேயே கொடுத்து இதை சாப்பிட சொல்லுங்கன்னு கோபமாக கூறிவிட்டு திரும்பி விட்டேன்.

ஒரு கிராமத்து விவசாயி தான் வியர்வை சிந்தி அறுவடை செய்த வெங்காயம் மேட்டூர் சூப்பர் சர்வீசின் பொறுப்பின்மையால் அழுகிப்போய் கிடக்கிறது.

அவர்களுடைய வலைத்தள தகவல் பக்கத்தில் பொருட்கள் தவறினாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்கிற வாசகத்தை சேர்த்திருக்கிறார்கள். என்ன ஒரு போக்கிரித்தனம்..!? இது அந்த சாதாரண விவசாயிக்கு எப்படி தெரியும்..?

வாடிக்கையாளரை மதிக்காத எந்த நிறுவனமும் வீழ்ச்சியையே சந்திக்கும் என்பது கடந்த கால நிதர்சனம்..!

இது தொடர்பான படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
பசுமை சாகுல்,
கன்னியாகுமரி.

Leave a Reply