Home>>செய்திகள்>>மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயரத்தி வழங்க வலியுறுத்தி நடைபெற உள்ள மறியல் போராட்டம்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயரத்தி வழங்க வலியுறுத்தி நடைபெற உள்ள மறியல் போராட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயரத்தி வழங்க வலியுறுத்தி நடைபெறும் மறியல் போராட்ட தயாரிப்புக் கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 14.12.21 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வலியுறுத்தி பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, சாணார்பட்டி, நிலக்கோட்டை, செம்பட்டி, திண்டுக்கல் ஆகிய எட்டு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த மறியல் போராட்டங்களில் 3000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழனி நகர், பழனி ஒன்றியம், தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் இருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று (07.12.21) காலை பழனியில் TARATDAC சங்கத்தின் பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் பழனி நகர தலைவர் காளீஸ்வரி, பொருளாளர் அய்யனார், ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார்.

ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தின் முடிவில் பழனி தாலுகா அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்றும், இம்மறியல் போராட்டத்தில் மேற்கண்ட மூன்று ஒன்றியங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


திரு. P. செல்வநாயகம் (மாவட்ட தலைவர்),
திரு. S. பகத்சிங் (மாவட்ட செயலாளர்),
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253

Leave a Reply