Home>>செய்திகள்>>மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.
மன்னார்குடி அரசு பொது மருத்துவமனை
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிமருத்துவம்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.

இந்த ஆக்சிசன் ஆலை ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சி‌கி‌ச்சை அளிக்க முடியும். இந்த திட்டத்திற்கான செலவு பிரதமர் கேர்சு (PM Cares) நிதியில் இருந்து ரூ.1 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் சூலை மாதம் தொடங்கப்பட்டு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு தயாரித்த எந்திரங்கள் மன்னார்குடி வந்தடைந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்த மாதம் 7ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் காணொலிக் காட்சியின் மூலம் ஆக்சிசன் ஆலையை திறந்து வைத்த பிறகு மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய ஆலையை துவக்கி வைத்தார்.


செய்தி உதவி:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.

Leave a Reply