சுமார் இரண்டு தினங்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள காதிபவன் கிளைக்கு, பந்தலடி பகுதியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் நிறுவனத்தின் பெயர் கிந்தி, ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழி மறுக்கப்பட்டிருப்பது தமிழின உணர்வாளர்கள் மூலமாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டது.
இதனை நாம் தமிழர் கட்சியின் மன்னை சட்டமன்ற வேட்பாளர் திரு சுந்தராம்பாள் இராமசாமி அவர்கள்
கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனே காதிபவன் நிர்வாகிகளிடம் தமிழினத்தின் கோரிக்கையை
அமைதியாக எடுத்து கூறியதோடு உடனடியாக தமிழில் எழுதவும் வைத்துள்ளார்.
இருந்தாலும் ஆங்கிலத்தை விட தமிழில் பெரிதாக எழுத வேண்டும் என்ற மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒவ்வொரு வணிக நிறுவனமும் தங்களின் பெயர் பலகைகளில் தமிழில் பெரிதாக எழுதி இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளதை ஒன்றிய அரசின் தரப்பில் இருந்து இயங்கும் இது போன்ற நிறுவனங்களே பின்பற்றாததால் மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக ஒன்றிய அரசு இதுப்போன்ற நிறுவனங்களை கொண்டு தமிழ் மொழியை அழிக்க நினைத்தால் அவர்களின் வணிகத்தை முற்றிலும் இந்த மண்ணில் ஒடுக்குவோம் என்றும் பொதுமக்கள் பேச துவங்கியுள்ளார்கள்.
—
செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.