Home>>செய்திகள்>>மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்வேலைவாய்ப்பு

மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.

மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் அவசரம் கருதி அதனை ஒரு தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் தற்போது அறநிலையத்துறை சார்பில்,ஒப்பந்த அடிப்படையில் கோவில்களில் அவசர சிகிச்சைக்கான மருத்துவர், செவிலியர் நியமனம் நடைபெற இருக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மருத்துவ உதவி மையங்களை உருவாக்குவது வரவேற்புக் குரியது.
ஆனால், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணிநியமனம் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையால் விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் அமைக்கப்படும் அவசர சிகிச்சை மருத்துவ நிலையத்திலும், மேலும் சில கோவில்களிலும் “தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்” மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நியமனம் செய்வது சரியல்ல.

மருத்துவர் / தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, நிரந்தர அடிப்படையில் மருத்துவர்களை, எம்.ஆர்.பி மூலம் நியமனம் செய்திட வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாதிருக்கும் MBBS மருத்துவர்களுக்கான MRB தேர்வை விரைவில் நடத்தி, மருத்துவப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

தொடர்புக்கு:
மருத்துவர். கணபதி சுப்பிரமணியம்,
பொது செயலாளர்,
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (TNMSA).


செய்தி சேகரிப்பு:
திரு. செந்தில்குமரன்,
மன்னார்குடி.
Ph:8667498084

Leave a Reply