Home>>ஆன்மீகம்>>சிதம்பரத்தில் வள்ளலார் பணியகம் துவக்கம்..!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

சிதம்பரத்தில் வள்ளலார் பணியகம் துவக்கம்..!

இன்று 24-10-2021 காலை 10 மணிக்கு சிதம்பரம் தெய்வத்தமிழ்ப் பேரவை அலுவலகத்தில் வள்ளலார் அன்பர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

அருட்பா நாகராஜன் அவர்கள் திருவருட்பா ஓதி திருவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

வள்ளலாரின் பன்நோக்கு கருத்துக்கள் பகிரப்பட்டு “வள்ளலார் பணியகம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

வள்ளலாரின் மெய்யியல், மருத்துவம், வானியல், அறிவியல், ஓகம், சமூகவியல் உள்ளிட்ட பன்முக கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வள்ளலார் பணியகத்தின் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக வே.சுப்ரமணியசிவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் தமிழ்த்தேசியப்பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினரும் வள்ளலார் நெறியாளர் க.முருகன், வேளாண் துறை பொறியாளர் திரு. பன்னீர் செல்வம், சத்திய பேரொளி தவச்சாலை நிறுவனர் தயவுத்திரு செல்லையா, அத்திப்பட்டு அருட்பா நாகராஜன், நல்லூர் சன்மார்க்க சங்க தலைவர் திரு.சண்முகம், வள்ளலார் நெறியாளர் சிதம்பரம் திரு சண்முகம், இறைவழி இயற்கை வாழ்வியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மரபு மருத்துவர் ஞான.சுந்தர பாண்டியன், கற்ப சித்தர் நாகவேல், மரபு மருத்துவர் இராமதாஸ், வழக்கறிஞர் திரு அருண்ராஜ், வள்ளலார் நெறியாளர் காட்டுமன்னார்கோயில் திரு அருளமுதன், சிதம்பரம் இராசேந்திரன், இளவரசன், தெய்வத்தமிழ்ப் பேரவை முன்னணி செயல்பாட்டாளர்கள் கோ.சந்திர சேகர், வே.சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் பேராசிரியர் திரு தில்லை நாயகம் அவர்கள் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவல் உரை நூல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இவற்றை வள்ளலார் நெறியாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வழங்கினார்.

நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மேலும் வள்ளற் பெருமான் 1873 ஆண்டு ஜப்பசி 7 நாள் சன்மார்க்க கொடி ஏற்றி பேருபதேசம் செய்த இதே நாளில் “வள்ளலார் பணியகம்” தொடங்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி உதவி:
திரு. கோபிநாதன்,
மன்னார்குடி.

Leave a Reply