மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மருத்துவர் N. விஜயகுமார் தலைமை வகித்தார். மருத்துவர். கோவிந்தராஜ், தலைமை செவிலியர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வானிலை செல்வகுமார், பசுமைக்கரம் கைலாசம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மன்னார்குடி தொழிலதிபர் திரு. SMT கருணாநிதி, நேசக்கரம் நண்பர் சாம் சகாயராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், மன்னார்குடி நேசக்கரம் ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறப்பாக பராமரித்து, நிர்வகித்து வருகின்ற நேசக்கரம் அவசர வாகன ஊர்தி குழுத்தலைவர் பாரதிதாசன், நிர்வாகி அருள்பாலாஜி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் மிஸ்டர் கூல் செல்வகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 122 அரசு மற்றும் தனியார் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு பொருள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
உடல்ரீதியான துன்பங்கள் வரும்போது மன்னார்குடி மக்களின் தாய் மடியாக திகழ்கின்ற மன்னார்குடி மருத்துவமனையில் பணியாற்றி, மக்களை அரவணைக்கின்ற பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து, குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்ற இந்த ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வை கடந்த 3 ஆண்டுகளாக நேசக்கரம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
—
செய்தி உதவி:
நேசக்கரம்,
மன்னார்குடி.