Home>>செய்திகள்>>முதல்வர் சிரமப்படுகிறார் என்று சொல்கிறார்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
செய்திகள்தமிழ்நாடுவானிலை

முதல்வர் சிரமப்படுகிறார் என்று சொல்கிறார்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

காலை வைத்தால் மலம் என்கிற அளவில் மண் ஊறிக் கிடக்கும் இடமாக சென்னை ஒவ்வொரு மழையிலும் இருக்கும். உள்ளூர் மக்கள் இந்த மாதிரி பெரும் மழைக்கு பழகியவர்களே.

அவர்கள் இத்தகைய மழைகளை பல ஆண்டுகளாக கண்டு வருபவர்கள் தான். ஆனால் நகர் பெரிதாகி முதலீடுகள் முழுவதும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். சமூகநீதியின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு என, போதுமான திட்டமிடல் இல்லாத அடிவயிற்று குடியேற்றம், தரமற்ற நகர கட்டுமானங்களின்‌ மொத்த சிக்கல் சென்னை.

ஏரி வீட்டுத் திட்டம் என்கிற திட்டம் சென்னை முழுவதும். உள்ளூர் வாசிகள் இது போன்ற மழைகளைப் பார்த்தவர்கள் தான். ஆனால் இதுபோன்று நீர் வெளியேற வழியில்லாததை கடந்த முப்பது வருடங்களாக நான் பார்க்கிறார்கள். கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வரும் சென்னை ஒப்பனை நடவடிக்கைகளால் மாறவே முடியாது.

அரசைக் கேள்வி எந்த விசயத்தில் கேட்க வேண்டும் என்று கூட தெரியவில்லை என்றால் என்ன சொல்வது? முதல்வர் என்கிற தனிமனிதரின் ஒளிபடத்தை போட்டுத் தான் உங்கள் விசுவாசத்தை காட்ட வேண்டுமா? இதுக்கு சமூக நீதி எனும் இராசாத்தி ரேடியோவைக் காட்டாதீர்கள். வீடு வரைக்கும் கிழியுது என்கிற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.


எழுத்தாளர். இளங்கோ கல்லானை


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

பட உதவி:
Alesia Kazantceva on Unsplash

Leave a Reply