மன்னையில் உள்ள இளைஞர்களால் மன்னையின் மைந்தர்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதல், ஆட்சி அதிகாரம் என்ற எதற்கும் ஆட்படாமல் மக்கள் நலன் மட்டுமே தமக்கான களமாக்கி உள்ளது.
மன்னையின் மைந்தர்கள் மண்ணின் மாற்றத்தை நோக்கி என்ற ஒற்றை வரி அமைப்பை இயக்குகிறது. அரசியல் கட்சிகளை கடந்து அரசியலுக்கு இளைஞர்களை அழைக்கும் தளமாக இருக்கிறது இளைஞர்கள் அரசியல் விழிப்போடு மண்ணிற்கான பணியாற்ற வேண்டும் நிரந்தர எதிர்காட்சியாக ஆள வேண்டும்.
ஆள்பவர்களின் சரியான நடவடிக்கையை ஏற்றும் தவறான முயற்சிகளுக்கு முட்டுக்கடையாக இருப்பதே அமைப்பின் நோக்கம். அதற்கு மக்களுக்கு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அதற்கான பல களப்பணிகளில் ஒன்றாக தொடங்கப்பட்டதே எமது சியார்தோப்பிள்ள நம்மாழ்வார் ஏரி பணி.
1960 வரை மன்னை மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழுவதற்கான நீர் தேக்கமாக இருந்தது பிற்காலத்தில் பயன்பாடற்று சிதைந்தது.
தமிழ் மொழி காப்பு, கருவை அழிப்பு, ஞெகிழி பை தவிர்ப்பு, வாக்குகளே பேராயுதமென மக்களின் விழிப்புணர்விற்காக பணிகளை செய்து கொண்டிருந்த மன்னையின் மைந்தர்கள் அமைப்பு இந்நீர் தேக்கத்தை புணரமைக்க முடிவு செய்தோம்.
அதற்காக கருவை மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் கருவையை அகற்றினோம். மூன்று பக்கங்கள் சிதைந்த கரைகள் ஒருபக்கம் புதிய கரை என்று எங்கள் சக்திக்கு மீறியதாக இப்பணி இருந்தது.
அமைப்பு தொடங்கிய காலம் முதல் எவரிடமும் நிதி பெறுவதில்லை அப்படி முக்கிய பிரமுகர்களிடத்தில் நிதி பெற்றால் நாளை அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கும் நிலை வரும் இது அமைப்பின் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம்.
நிறைய பேசினோம், கடுமையாக விவாதித்தோம், கருத்து முரண்களில் கலங்கினோம், இறுதியில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு செலவானாலும் சரி வெளியில் எவரிடத்திலும் வசூலிப்பது இல்லை முழுக்கமுழுக்க அமைப்பினர் அவர்கள் நண்பர்கள் உதவியோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவிட்டு இப்பணியை முடிப்போம் என்று முடிவெடுத்து.
2016லில் இப்பணியை தொடங்கினோம் இன்று போல அன்று நீர்நிலைகள் குறித்தான பெரிய விழிப்புணர்வு இல்லை உண்மையை கூறவேண்டுமானால் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்பணியை செய்து முடிக்க நினைத்தோம்.
இச்சூழலில் வரத்து வாய்க்காலோ வடிகால்களையோ நம்ப முடியாத நிலை. முழுக்க முழுக்க அப்பகுதிகளிலுள்ள மழைநீரினை சேமித்து அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே திட்டம்.
வேலை தொடங்குவதற்கு அமைப்பின் சந்தா போதாது என்பதை தெளிவாக உணர்ந்து சிறப்பு நிதிகளை வசூல் செய்தோம். அதுவும் அமைப்பில் உள்ள உறவுகள் சாந்தா தொகைவிட அதிகமான தொகையை அதாவது அவர்கள் குடும்ப செலவுகள் பொழுதுபோக்கிற்கு ஒதுக்கிய தொகை அனைத்தையும் கொடுக்க முன்வந்தார்கள்.
அதுபோக அமைப்பு உறவுகள் அவர்களுக்கு நேரடியாக தெரிந்த அவர்களை மட்டுமே நம்பி நிதி தரக்கூடிய மேன்மையானவர்களிடமும் பல கட்டங்களாக நிதி பெற்று இரண்டு வருட கடினமான உழைப்பில் பணியை முடித்தோம். புற அழுத்தங்கள் மறைமுகமான அரசியல் குறுக்கீடுகள் என பல தடையை கடந்து மன்னையின் மாற்றத்தினை உயிராக நேசித்த சிலநூறு இளைஞர்களின் அறம் இப்பணியை வீரியமாக செய்து முடிக்க உறுதுணையாக இருந்தது.
கிட்டத்தட்ட 12 இலட்சத்திற்கும் மேலான தொகையை செலவிட்டு இப்பணியை நேர்த்தியாக செய்து முடித்தோம். இப்பணி அன்றைய காலத்தில் சமூக வலைத்தளம் வழியாக பலரை அடைந்து நீர்நிலை மீட்பு குறித்த விழிப்புணர்வை ஏற்பட்டுத்தியது பல இளைஞர்களை களத்திற்கு நகர்த்தியது.
கருவை அழித்து ஏரி பணியை முடித்து ஏரியின் மேல் கரையில் சியார்குளம் வழியாக குழாய் அமைத்து தண்ணீர் வருவதற்கு ஏதுவாக தடுப்புகளும் அமைத்தோம்.
ஆனால் நினைத்தபடி மழை பொழிவில்லை இயற்கை எங்களை வஞ்சித்தது. இருந்தாலும் மனந்தளராமல் ஏரியில் பனை விதைகள் விதைப்பது மரக்கன்றுகளை நடவு செய்வது தண்ணீர் செறியூட்டிகள் அமைப்பது என்று பராமத்து பணிகள் செய்து வந்தோம்.
அதுபோல KK நகரிலிருந்து வருகிற வாய்காலையும் அவ்வபோது தூர்வாரி வைத்தோம் நல்ல மழை பொழிந்தாள் ஏரி நிறையும் சூழலை சிறுசிறு பணிகள் மூலம் செய்தோம். எதிர்பார்த்த படி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பொழிந்த மிதமான மழை ஏரியின் யானை பசியை போக்கியது ஏரி தன்னுடைய கொள்ளளவை எட்டியது.
இனி ஏரியை பராமரித்து சுற்றுப்புறத்தை சரியாக செப்பனிட்டு மேம்படுத்த வேண்டும் அதுபோல அரசாங்கத்தை இதற்கு வரத்து வாய்க்கால் அமைப்பதற்கான பணியினை தொடங்க வலியுறுத்த வேண்டும். நகரின் மையத்தில் இருப்பதால் இதனை சுற்றுலா மையமாக உருவாக்க திட்டம் வகுக்க வேண்டும்.
எப்படி கட்சி பாகுபாடுகளோடும் கருத்து வேறுபாடுகளோடும் அதேநேரத்தினில் மன்னையின் மாற்றத்திற்காக இவ்வேரி பணியில் பல்லாயிரம் நாட்கள் உணர்வோடு உரிமையோடு உயிர்பித்தலோடு உழைத்தோமோ. அதுபோல எஞ்சிய பணியை முடிக்கவும் இணைவோம் மன்னையின் மைந்தர்களாக மண்ணின் மாற்றத்தை நோக்கி நகர்வோம்.
மேலும் இப்பணியை முடிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏரியின் களத்தில் செயலாற்றியும் நிதி வசூல் சமூக வலைதளங்கள் வழியாக கருத்தியல் புரட்சி ஏற்பட உறுதுணையாக இருந்த அனைத்து மன்னையின் மைந்தர்கள் அனைவருக்கும் நன்றி… நன்றி… நன்றி…
—
கட்டுரை:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.