Home>>இந்தியா>>மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாக்கு பாராட்டு.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்விளையாட்டு

மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாக்கு பாராட்டு.

பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன்.
நெஞ்சில் உறுதியும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்.

எதிர்காலத்தில் இன்னும் பல பெருமைகளை தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெற்றுத்தர செல்வி.ஜெர்லின் அனிகா அவர்களை வாழ்த்துகிறேன்.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply