Home>>உலகம்>>புலம்பெயர்ந்த தேசத்தில் எமது பண்பாட்டை, கலைகளை பாதுகாக்கும் பண்பாட்டு பாதுகாவலர்களை வாழ்த்துவோம்
உலகம்கனடாகலைசெய்திகள்தமிழர்கள்

புலம்பெயர்ந்த தேசத்தில் எமது பண்பாட்டை, கலைகளை பாதுகாக்கும் பண்பாட்டு பாதுகாவலர்களை வாழ்த்துவோம்

ஈழத்தமிழர் உறவுகளோடு தொடர்ந்து பயணித்து வருபவள் என்ற முறையில் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் அர்பணிப்பு. தான் மேற்கொண்ட எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பும் தியாகமும் நேரகாலம் பார்க்காமல் எடுத்த காரியத்தை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்ற உறுதியும் பிரமிக்கத்தக்கது. இது இன்று நேற்று வந்ததல்ல இலங்கையில் 1950 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்த்து நடந்து முடிந்த மாபெரும் தமிழ் மாநாடு இவர்கள் எப்படி வாழ்ந்தவர்கள் வந்தவர்கள் என்பதை எமக்கு உணர்த்தும். வரலாறு படித்தவர்களுக்கு இது நன்றாக விளங்கும் .அந்தவகையில் கனடா , மொன்றியலில் பரத நடன ஆசிரியராக இருந்து வரும் ஈழத்தை சேர்ந்த திருமதி சைலா கவிந்தன் அவர்களின் திறமை போற்றத்தக்கது.இவர் தஞ்சை கலைக் கல்லூரியில் நடனம் பயின்றவர் என்பது கூடுதல் சிறப்பு.

அண்மையில் நடைபெற்ற இந்திய வம்சாவழி குழுவின் 25 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் கனடா நாட்டின் பிரதமரான நம் அனைவரின் அபிமானத்தைப் பெற்ற மதிப்பிற்குரிய திரு ஜஸ்டின் அவர்களின் முன்னிலையில் கவினாலயா நடனக்குழு மாணவர்கள் மற்றும் நடன ஆசாள் திருமதி சைலா கவிஞனின் அவர்களின் நடனமும் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

கல்வி என்பதே இந்த காலத்தில் காசு சம்பாதிக்கும் விடயமாக மாறிவிட்ட நிலையில் கலைகள்
அவ்வட்டத்திற்குள் வந்து வெகு நாளாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடனத்தை தனது நாடி துடிப்பாக கொண்ட ஒரு ஆசிரியை என்றே திருமதி சைலா கவிந்தன் அவர்களை கூறலாம்.

திருமதி சைலா கவிந்தன் நடனம் மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. அங்கே வரும் மாணவர்களுக்கு ஒழுக்கம் ,கட்டுப்பாடு, நமது வழிபாடு, கடவுள் போன்ற பல்வேறு விடயங்களையும் போதிக்கிறார். புலம்பெயர்ந்த தேசத்தில் திறமைகளையும் தமிழர் கலைகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் இது போன்ற திறமை வாய்ந்த கலைஞர்களையும், ஆசிரியர்களையும் போற்றி பாதுகாத்து அவர்களுக்கு பக்கபலமாக புலம்பெயர்ந்த மக்கள் இருக்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக இங்கு வைத்துக்கொண்டு புலம்பெயர்ந்த தேசத்தில் எமது பண்பாட்டை பாதுகாக்கும் இத்தகைய பண்பாட்டு பாதுகாவலர்களை வாழ்க வாழ்க என வாழ்த்தி கொள்வதில் திறவுகோல் ஊடகமும் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
கனடா , மொன்றியல்

Leave a Reply