உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் 20 ஓவர் உலகோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கயுள்ளது…
டெஸ்ட் 50 ஓவர் என நடத்தப்பட்ட போட்டிகள் 2002 இல் கிரிக்கெட் அறிமுகப்படுத்திய மற்றொரு அறிமுகமாக 20 ஓவர் போட்டி தொடங்கப்பட்டது..
ஆனால் முதல் சர்வதேச t20 போட்டி 2005 இல் ஆஸ்திரேலியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது..
இந்நிலையில் 20 ஓவர் போட்டிகளுக்கான முதல் உலக கோப்பை 2007 ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடத்தியது சர்வதேச கிரிக்கெட் வாரியம்..
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வென்று சரித்திரம் படைத்தது..
இதன் எதிரொலியாக 20 ஓவர் போட்டி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது..
உள்ளூர் லீக் போட்டிகளை பல நாடுகள் 20 ஓவர் முறையில் நடத்தி வருகின்றனர் .
முதல் உலககோப்பையை தொடர்ந்து
2 வது உலககோப்பை பாகிஸ்தானும்
3வது கோப்பையை இங்கிலாந்தும்
4 வது கோப்பையை
மேற்கு இந்திய தீவுகளும்
5 வது கோப்பையை இலங்கையும்
வென்றது…
6வது உலககோப்பை முதன் முறையாக இந்தியாவில் நடைபெற்றது.
இந்திய வெல்லும் என கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த வேளையில் அரை இறுதியில் தோற்று வெளியேறியது..
அதில் மீண்டும் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் சாம்பியன் ஆனது..
இரண்டு முறை 20 ஓவர் கோப்பை வென்ற ஒரே அணியும் அணி மேற்கு இந்திய தீவு தான்..
இரண்டு முறையும் அணிதலைவர் ஆக இருந்தவர் டேரென் சமி..
அதன் பிறகு கொரோனா காரணமாக 2021 இல் துபாய் நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியா முதன் முறையாக பட்டம் வென்றது..
இந்நிலையில் 8 வது உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது..
16 நாடுகள் 45 ஆட்டங்கள் இந்த முறை நடைபெறுகிறது..
முதன் முறையாக கோப்பை வெல்ல 9 அணிகளும் 2வது முறை வெல்ல 5 அணிகளும் 3வது முறை கோப்பை வெல்ல 1 அணியும் அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பதால் 29 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது..
முதல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின் இதுவரை எந்த ஒரு உலக கோப்பையும் வெல்லவில்லை. அதனால் இந்த முறை கண்டிப்பாக வெல்லும் என்று நம்பிக்கையில் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமாக உள்ளனர். எது எப்படியோ உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கிவிட்டது. இந்தியா தன் முதல் சுற்று ஆட்டத்தில் வரும் 23 ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது .அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் வேறு. அதிரடி சரவெடியாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் முதல் நாளே தொடங்குகிறது.
-ஆனந்த் ரெய்னா.