Home>>அரசியல்>>திமுக ஆட்சியில் தேனாரும், பாலாரும் ஓடும் என்று யாரும் வாக்களிக்கவில்லை!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

திமுக ஆட்சியில் தேனாரும், பாலாரும் ஓடும் என்று யாரும் வாக்களிக்கவில்லை!

மதிப்பிற்குரிய திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு…
திமுக ஆட்சியில் தேனாரும் பாலாரும் ஓடும் என்று யாரும் வாக்களிக்கவில்லை! வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்துத்வ ராசுட்ரிய சேவா சங்க கும்பலுக்கு எதிராக திமுக நிற்கும் என்றே ஒரேக் காரணத்திற்காகத்தான் இந்த மக்கள் வாக்களித்தார்கள்!
அவர்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் ஐயா ஸ்டாலின் அவர்களே!…
நீங்கள் இன்று அவர்களை அண்டிப்பிழைத்து ஐந்து வருட ஆட்சியையும் உங்கள் சொத்துக்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம்! ஆனால் மக்கள் முழுவதும் புரிந்து கொள்ளும் போது நீங்கள் ஆயிரம் பிரசாந்த் கிசோரை கொண்டு வந்து நிறுத்தினாலும் மக்கள் உங்களை புறக்கணித்துவிடுவார்கள்.
இந்துத்வா அடிமையின் அடிமையாக இருப்பதை விட இந்துத்வாவிடமே அடிமையாக இருப்போம் என்று மக்கள் நினைத்து விட்டாலோ? மாற்று அரசியல் முளைத்துவிட்டாலோ நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள் ஐயா ஸ்டாலின் அவர்களே.
பிறகு காலம் முழுதும் நீங்கள் அழுது புரண்டாலும் பலனில்லை மிஸ்டர் ஸ்டாலின். வரலாற்று பிழை செய்த உங்கள் தகப்பனார் ஐயா கருணாநிதியை ஈழ துரோகத்துக்கு பிறகு சாகும்வரை புறக்கணித்த மக்கள் இம்மக்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
தமிழர்களின் தியாகத்தாலும் இரத்தத்திலும் முளைத்த திமுகவிற்கு நீங்கள் சமாதி கட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறதா ஐயா. ஸ்டாலின் அவர்களே!
தேர்தல் காலத்தில் இந்துத்வாவிற்கு எதிரியாக பாசாங்கு செய்து வெற்றிப்பெற்று விடலாம் என மக்களை ஏமாளிகளாக நினைத்து மனக்கணக்கு போடுகிறீர்கள் எல்லா காலத்திலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது என்பது புரியுமா? புரியாதா? ஐயா ஸ்டாலின் அவர்களே.
இப்படியே தொடர்ந்தால் உங்கள் திராவிட மாடல் உயிரற்ற பொருள்களின் அருங்காட்சியகத்தில் தான் இருக்கும்.
மிக மிக ஏமாற்றமாக இருக்கிறது ஐயா ஸ்டாலின் அவர்களே! மானமும் அறிவும் மனிதனுக்கு அழகில் துவங்கிய திமுகவுக்கு நீங்கள் பாடைக்கட்டி பல்லாக்கில் ஏற்றி பாலூற்றி நாக்பூர் புரோகிதர்களை வைத்து கருமாதி செய்துவிடாதீர்கள்.
இந்துத்வாவிற்கு எதிராக பேசியதால் வீசப்பட்ட செருப்புகளால் கட்டி எழுப்பபட்ட திமுகவை, அதே இந்துத்வாவிற்கு கால் செருப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருகிறீர்களா? திமுக உங்கள் குடும்ப சொத்து அல்ல!
தமிழ்நாட்டின் தமிழர்களின் பெருமைக்குரிய சொத்து!
தோழமையுடன்,
பேரளம் பேரொளி.

Leave a Reply