Home>>திரைத்துறை>>தமிழில் மட்டுமே பெயர் வைத்த “சாமான்ய” கதாநாயகன்
திரைத்துறை

தமிழில் மட்டுமே பெயர் வைத்த “சாமான்ய” கதாநாயகன்

தமிழ்ப் பெயர்களை மட்டுமே தலைப்பாக வைத்த “சாமான்ய” நாயகன்.
எளிமையான கிராமப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்து தமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து,
மக்கள் நாயகன் எனப் பெயர் எடுத்து இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்த தமிழ் நாயகன் ராமராஜன் அவர்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படம் ” சாமானியன் “.

Excetera என்டேர்டைன்மெண்ட் சார்பில் வி. மதியழகன் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
தம்பிகோட்டை, மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் R. ராகேஷ் படத்தை இயக்குகிறார்.
ராமராஜன் அவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் நடிக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் இயக்குநரும் நடிகருமான கே எஸ் ரவிக்குமார் நடிக்கிறார்.
இவர்களுடன் போஸ் வெங்கட், அறந்தாங்கி நிஷா, ஸ்ம்ருதி வெங்கட்,
முல்லை, கோதண்டம் நடிக்கிறார்கள்..

சென்னை, மதுரை , தஞ்சாவூர் பெங்களூரு என விறுவிறுப்பாக உருவாகி வருகிறது “சாமானியன் “..
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பது கூடுதல் சிறப்பு.இவர்கள் இணைப்பில் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் பிரசித்தி பெற்றவை.

மது புகைபிடித்தல், காட்சிகள் இல்லாமல் எம் ஜி ஆர் பாணியில் நடித்த நடிகர், தமிழ் தலைப்பை மட்டுமே தன் படங்களின் தலைப்பாக வைத்த நடிகர், இறுதி வரை சிறு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே படங்கள் செய்து கொடுத்து தயாரிப்பாளரின் நாயகன் என்ற பெருமையை பெற்ற நடிகர் .
சாமானியன் 2023 ம் ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல். ராமராஜன் யார் என்று கிட்டத்தட்ட இந்த தலைமுறையே மறந்து போன நிலையில் கதாநாயகனாக மீண்டும் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார். சாமானியன் மீண்டும் ஒரு கரகாட்டக்காரன் ஆகுமா பொறுத்திருந்து பார்ப்போம்..

-ஆனந்த் ரெய்னா.

Leave a Reply