Home>>அரசியல்>>தை முதல் மாதம் என்று கல்வெட்டு சொல்கிறதா?
அரசியல்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

தை முதல் மாதம் என்று கல்வெட்டு சொல்கிறதா?

தை முதல் மாதம் என்று இராமநாதபுரம் கல்வெட்டு கூறுகிறது – என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் சித்திரையே முதல் மாதம் – என்றுதான் அந்தக் கல்வெட்டு கூறுகின்றது.

இந்தல் கல்வெட்டு ஒரு நாட்காட்டி அல்ல. தையில் தொடங்கும் ஒரு நிகழ்வுக்கான ஆண்டுக் குறிப்பு. அதன் முதல் கட்டத்தில் தை – என்பதற்குக் கீழே தெளிவாக 10 (ய) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் பொருள் 10 ஆவது மாதமான தை என்பதுதான். தை 10 ஆவது மாதம் என்றால் சித்திரைதான் முதல் மாதம். மேற்கண்ட கல்வெட்டைக் கொண்டு தையில் ஆண்டு தொடங்கியதாகச் சொல்ல முடியாது.

இராஜராஜன் ஐப்பசியில் பிறந்ததால் அவர் காலத்தில் ஆட்சியாண்டு ஐப்பசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது (இது ராஜேந்திரன் ஆட்சியில் மாறியது). அப்போது இதே போல ஐப்பசியில் தொடங்கும் ஒரு கட்டம் போடப்பட்டு இருக்கும். இவை சித்திரையில் தொடங்கும் ஆண்டுக் கணக்கை மையமாகக் கொண்டவைதான். இவற்றை சித்திரைக்கு மாற்றாகப் பார்க்க முடியாது.

10ஆம் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்பது, பிறந்து 10 மாதம் ஆன பின்பே பிறந்தநாள் என்பதைப் போன்றது.

(குறிப்பு: இந்தக் கல்வெட்டுகள் பொதுவாக இராமநாதபுரம் மசூதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.)


திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply