Home>>விளையாட்டு>>மீண்டும் மேற்கே உதித்த சூரியன்..
விளையாட்டு

மீண்டும் மேற்கே உதித்த சூரியன்..

மீண்டும் மேற்கே உதித்த சூரியன் :

(A sunrise again in “West”indies )

 

கிரிக்கெட் வரலாற்றில் 1960 to 1990 வரை உலக அளவில் கிரிக்கெட்டை கொண்டு போய் சேர்த்ததில் பெரும்பங்காற்றியவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியினர்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு அது அவர்களுக்கான விளையாட்டு மட்டுமே என்பதை உடைத்து கிரிக்கெட் என்பதை கறுப்பர்களின் விளையாட்டாக மாற்றி உலகத்தையே அச்சுறுத்தியவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியினர். ஆனால் ஏனோ யார் செய்த பிழை என்று தெரியவில்லை 2000 த்துக்கு பிறகு படிப்படியாக அவர்களுடைய அணியானது பலவீனமாகி கடந்த சில வருடங்களாக உலகக்கோப்பை ஆடக் கூட தகுதியற்ற நிலையில் சென்று விட்டார்கள் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு விறுவிறுப்பான சுவாரசியமான படத்திற்கு நல்ல வலுவான கதாநாயகன் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு வலுவான வில்லனும் அவசியம். ஆனால் கிரிக்கெட் உலகத்தை பொறுத்தவரை மேற்கிந்த தீவுகள் அணி தான் பலருக்கு கதாநாயகன். அவர்கள் யார் கூட ஆடினாலும் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பொதுவான ரசிகர்கள் விரும்புவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு விஸ்வரூப அணி கழதை தேய்ந்து கட்டெறும்பான கதையா கடந்த சில வருடங்களாக படுமோசமாக ஆடினார்கள் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர்கள் லாயக்கே இல்லை என்பது போல் ஆகி விட்டது அவர்கள் ஆட்டம்.

அதிலும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணியை அவர்கள் சொந்த மண்ணில் போய் சென்று எதிர்கொள்வதை பார்க்கும் பொழுது என்னைப் போன்றவர்களுக்கு பரிதாபமாகத் தான் தோன்றியது.

ஏண்டா இப்படி வாயில்லாத பூச்சியை கொண்டுட்டு போயி மூச்சு திணற திணற அடிக்கிறீங்க.. இது உங்களுக்கே நியாயமடான்ன ஐசிசி மேலேயும் கடும் கோவம் வந்தது. ஏன்டா வெஸ்ட் இண்டீசை கொண்டுபோய் ஆஸ்திரேலியால டெஸ்ட் தொடர் வைக்கிறீங்கன்னு..

ஆனால்,

அனைவரின் எதிர்பார்ப்பையும் கணிப்பையும் உடைத்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரை சமன் செய்துள்ளனர் …

வாழ்த்துக்கள் மேற்கிந்திய தீவுகள்..😍😍😍😍🙏🙏🙏🙏🙏

 

வர்ணனையாளராக இருந்த லாராவின் கண்களில் எப்படி ஆனந்தக் கண்ணீர் துளிர்த்ததோ அதுபோலத்தான் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நேற்றைய தினம் இருந்தது.
அறிமுக வேகப் பந்துவீச்சாளர் சமர் ஜோசப் ரொம்பவே அற்புதமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். அவருடைய பல விக்கெட்டுகள் அந்த கால மேற்கு இந்திய தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களை ஞாபகப்படுத்தியது..

அன்று ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு பெரிய பாதுகாப்பை கொடுத்துள்ளார் என்னும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

A security officer secures west indies.

நேற்றைய தினம் உலக கிரிக்கெட்டின் பொன்னாள் என்றே சொல்லலாம் .

வாய்ப்பே இல்லை என்று அனைவராலும் முடிவு செய்யப்பட்ட இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மட்டும் இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவையும் இந்தியாவை யும் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளன..

என்னதான் நமக்கு இந்திய அணியின் மீது கடும் கோபம் இருந்தாலும் உலக கிரிக்கெட்டுக்கு ஒரு அற்புதமான நாள்…

முடிவாக நல்ல கிரிக்கெட் வென்றது..

மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் தொடருமா??
கண்டிப்பாக தொடர வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு..

மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply