Home>>கல்வி>>மாணாக்கர்கள் பெரும் திரளாக கலந்துகொண்ட காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
கல்விசமூக பணிசுற்றுசூழல்தமிழ்நாடுவானிலை

மாணாக்கர்கள் பெரும் திரளாக கலந்துகொண்ட காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு

தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுசூழல் அமைப்பின் பூவுலகின் சிறார்கள் நடத்தும் வெள்ளிக்கிழமை விடியல் 18 ஆவது நிகழ்வு காலநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு போராட்டமாக இன்று 24.09.2021 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் கோனூர்நாடு பொய்யுண்டார்கோட்டை – செல்லம்பட்டி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

நிகழ்வில் கோனூர்நாடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்துகொண்டு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.

நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் க.தவசெல்வன், ஆசிரியர் தேவி தமிழ்வேந்தன் ஆகியோர் வழிநடத்தினார்கள். சேது,வெங்கட்ராமன், கோ.முருகானந்தம், ம.சங்கர், ரெ.சுரேஷ், பிரகாஷ், ப.தண்டாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்தி உதவி:
திரு. நடராஜன்,
சிங்கப்பூர்.

Leave a Reply