பன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் ” நாட்குறிப்பேட்டின் எட்டாம் ஆண்டு வெளியீடான – “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு தி.பி. 2053 (2022)” இன்று (08.12.2021) மாலை வெளியிடப்பட்டது.
இன்று (08.12.2021) மாலை, சென்னை க.க. நகரிலுள்ள பன்மைவெளி வெளியீட்டக அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் “திருவள்ளுவர்” நாட்குறிப்பேட்டின் 2022ஆம் ஆண்டுக்கான முதல் பிரதியை வெளியிட பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். பன்மைவெளி வெளியீட்டகப் பொறுப்பாளர் திரு. வெற்றித்தமிழன் முன்னிலை வகித்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. அருணபாரதி, பி. தென்னவன், பொதுக்குழு தோழர் வெ. இளங்கோவேன், மகளிர் ஆயம் தோழர்கள் செந்தாமரை, கலைவாணி, தோழர்கள் பாலசுப்பிரமணியம், பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“திருவள்ளுவர் ” நாட்குறிப்பேட்டின் தி.பி. 2053 (2022) இன் தனிச்சிறப்புகள்..!!!
* தனித்தமிழில் நாட்குறிப்பேடு!
* ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்!
* ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள்!
* உலகறிந்த தலைவர்கள் – தமிழர்களின் தொன்மையான சிந்தனையாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகள்!
* தமிழர் தலைவர்களின் சிந்தனைகள், மேற்கோள்கள்!
* நாடுகள் விடுதலை பெற்ற வரலாற்றுக் குறிப்புகள்!
* திருக்குறள், புறனாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்!
* அறிஞர்கள் – கவிஞர்கள் – எழுத்தாளர்கள் – அரசியல் தலைவர்கள் – போராளிகள் என கோட்டோவியங்களோடு அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
* பண்பாட்டு அடையாளங்கள் – இயற்கை மருத்துவக் குறிப்புகள் என வண்ணத்திலும் – கருப்பு வெள்ளையிலும் பின் பகுதிகளில் மிளிரும் தனிப் பக்கங்கள்.
* ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண் மற்றும் தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்திற்கென புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு தயாராகிக் கொண்டுள்ளது!
* நாட்குறிப்பேடு ஒன்றின் விலை ரூ. 250 /-.(அஞ்சல் கட்டணம் (உள்நாடு) – ரூ. 50 /-)
* நாட்குறிப்பேட்டைப் பெற 9840848594, 9443918095 என்ற கைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!
—
செய்தி உதவி:
பன்மைவெளி வெளியீட்டகம்,
பேச: 98408 48594, 94439 18095
தொலைப்பேசி : 044 – 2474 2911
முகநூல் : FB.com/panmaiveli
மின்னஞ்சல் : panmaiveli@gmail.com