Home>>செய்திகள்>>ஃபாக்சான் தொழிற்சாலையில் உணவு நஞ்சானதால் சுமார் 1000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள்தமிழ்நாடு

ஃபாக்சான் தொழிற்சாலையில் உணவு நஞ்சானதால் சுமார் 1000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபாக்சான் தொழிற்சாலையில் உணவு நஞ்சானதால் சுமார் 1000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. அதை விசாரிக்கச் சென்ற தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வைஷ்ணவி என்ற சமூக ஆர்வலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சமூக ஆர்வலர் வளர்மதி விடிய விடிய காவல் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு போராடுவதும் நியாயம் கேட்பதும் தவறா? அதிமுக ஆட்சியில் வளர்மதி கைது செய்யப்பட்டதை நாள் முழுதும் ஒளிபரப்பின பெரிய ஊடகங்களும் இப்போது அமைதி காக்கின்றன. சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்ததே தவறு என அரசும் காவல்துறையும் கூறுகிறது.

திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் வந்து உட்கார்ந்து போராடுவதே தவறு என்கிறார். பாசிசம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடும் இடதுசாரி தோழர்களையும் வதந்தி பரப்புகிறார்கள் என கொச்சைப்படுத்துகிறார்கள் திமுக ஊடகவியலாளர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சொற்ப கள- இடதுசாரிகளையும் கொச்சைப்படுத்தி முதலாளிகளுக்கும் அரசுக்கும் சாமரம் வீசுவது பகுத்தறிவில் எப்போது சேர்ந்தது என தெரியவில்லை.

குறைந்தபட்சம் YouTube ஊடகங்களாவது இந்த பிரச்சனை குறித்து நேர்மையாக பேசுங்கள். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.

தோழர்கள் வைஷ்ணவி, வளர்மதி கைதுக்கு கடும் கண்டனங்கள். நடுநிலை பேசும் தோழர்கள் வாய்மூடி இருப்பது வேதனை.


செய்தி உதவி:
நாச்சியாள் சுகந்தி அவர்கள்.


செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply