Home>>இந்தியா>>காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவரலாறுவேளாண்மை

காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!


காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதனை நடைமுறைப்படுத்தி – காவிரிப்படுகையில் சுற்றுச்சூழலையும், வேளாண்மையையும் நாசமாக்கி வரும் இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வேட்டையைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி – நேற்று 2022 ஆகத்து 30 அன்று, திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் – 30.08.2022 – செவ்வாய் அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு, திரு. ச. கலைச்செல்வம் தலைமை தாஙகினார். திரு. மன்னை இரா. இராசசேகரன் வரவேற்புரையாற்றினார். திருவாளர்கள் வள்ளூர் கண்ணன், செ. சிவா சேகரை, இராதாநரசிம்மபுரம் கோவலன், ந. செல்வமணி, மன்னை தேவேந்திரன், ஆரூர் மு. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், திரு. சூனா செந்தில் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்கள். நிறைவில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். தோழர் மன்னை அரிகரன் நன்றி கூறினார்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் பொறிஞர் செந்தில் வேலவன், இரா.தனசேகரன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன், பொதுக்குழுக் உறுப்பினர்கள் சீர்காழி அரவிந்தன், க.தீந்தமிழன், சிதம்பரம் தோழர் சக்திவேல், தமிழக உழவர் முன்னணி சாமிமலை பொறுப்பாளர் பா. திருஞானம், தமிழ்க் கலை இலக்கிய பேரவை குடந்தை அரங்க.பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மன்னார்குடி உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு,
பேச: 98419 49462, 94432 74002.

Leave a Reply