Home>>கவிதை>>விந்தியம் தாண்டிய வினை
கவிதை

விந்தியம் தாண்டிய வினை

விருந்தாளி என்றழைத்தோம் ,

விருந்தாளிக்கு பிறந்தவன் என்றழைத்து விட்டான் .

 

சாத்திரம் சடங்கென கூற்றாக்கினோம்,

சூத்திரனென  கூறுபோட்டு விட்டான்.

 

கோவிலில் குடியேற்றினோம்,

கோமியம் குடிக்க கூறுகிறான். 

 

இறவா அமிழ்தம் கொண்டோம், 

இறந்தவளைக் கொண்டு 

இறைவா என  ஆராதிக்கிறான். 

 

தினமொரு திண்ணை அமைத்தோம்,

தீண்டத்தகாத வனென அழைக்கிறான் .

 

வினையில்லா வித்தை கற்றோம்,

விளைவிப்பவர் யாவரும் வீணர்கள்

என வீழ்த்த துடிக்கிறான். 

 

“வள்ளுவம் நமது வாய்மொழியாகும், பகுத்தறிவு நமது பண்பாடாகும்”

 

பெ.மேகநாதன், சென்னை

(2050  மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply