Home>>கல்வி>>லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணாக்கர்களுக்கான வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. அனைவரையும் நல்நூலகர் திரு. ஆசைத்தம்பி வரவேற்றார். இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் திரு. என்.இராஜப்பா தலைமை தாங்கினார்.

தலைமை உரையில் “திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அமைவுகளில் உள்ள மாணவர்கள் இந்த வாரம் முழுவதும் தங்கள் பகுதியில் உள்ள மாவட்ட நூலகம் அல்லது கிளை நூலகம் அல்லது ஊர்ப்புற நூலகத்திற்கு சென்று நூலக பயன்பாடுகள் நூலக விதிமுறைகள் நூலக வசதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் நாட்டு நலப்பணி திட்ட மாணாக்கர்கள் நூலக உறுப்பினராக வேண்டும். மேலும் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி கிளை நூலகங்களில் தற்போது வரப் பெற்றுள்ள நவீன வசதியான மெய்நிகர் கருவியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக இந்த திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது” குறிப்பிட்டு பேசினார்.

கொருக்கை அரசு பாலிடெக்னிக் துணை முதல்வர் புண்ணியமூர்த்தி, வாசகர் வட்ட தலைவர் நாகராஜன், ஆசிரியர் ரபீக், பாலு ராய் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் நா. துரை ராயப்பன், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜகுமாரி, திவ்யா, தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரேவதி, நல்லாசிரியர் சக்ரபாணி, துணை தலைமையாசிரியர் திரு. பாலமுருகன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வை வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணி மாணவர்கள் மற்றும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் மொத்தம் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணாக்கர்களின் சேவைக்காக ராய் டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் ராய் டிரஸ்ட் சார்பாக நூலக உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். நூலகர் சுஜாதா நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply