இந்திய ஒன்றிய கிரிக்கெட் அணி (BCCI), IPL தொடருக்கு பின்னர் இம்மாதம் அவுசுத்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளது.
இந்திய ஒன்றியம் மற்றும் அவுசுத்திரேலியா அணிகள் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியின் 7வது ஓவரின் போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் ‛அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி State bank of Indiaவிற்கு கோரிக்கை வைத்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
அவுசுத்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளதால், அதற்கு கடன் வழங்க வேண்டாம் எனக் கூறி 2 போராட்டக்காரர்கள் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ஒன்றியத்தில் வங்கிகள் பல மூடப்படுவதும், அல்லது இணைக்கப்படுவதுமாக உள்ளது மற்றும் வங்கி பணம் போடவும், எடுக்கவும் பணம் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிப்பும் வருகிறது. இந்த நிலையில் SBI வங்கியால் எப்படி 1 பில்லியன் அவுசுத்திரேலியா டாலர் தொகையை அதானி குழுமத்திற்கு வழங்க இயல்கிறது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.
—
செய்தி:
ஆனந்த், முத்துப்பேட்டை.