திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரு.அரவிந்தன் அவர்களின் பரப்புரை வாகனத்தை, அவரின் ஓட்டுநர் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பகுதியில் தன்னுடைய வீட்டில் நிறுத்திய இருந்த பொழுது நேற்றிரவு (02/02/2021) உடைத்து நொறுக்கியுள்ளனர்.
இது சந்தேகத்திற்கு இடமாக பாசக கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, இதில் ஈடுபட்ட மேலும் இருவரையும் பிணையில் வெளிவர இயலாத அளவில் வழக்கு பதிவு செய்துள்ளதாக திரு.அரவிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் துவக்கத்தில் உள்ளூர் பாசக மற்றும் திராவிட கட்சிகள் இரண்டும் இணைந்துக்கொண்டு வழக்கு பதிவுச்செய்ய கூடாது என்றும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் திரு.அரவிந்தன் அவர்கள் வழக்கிற்கான ஆதாரங்களை காவல்நிலையத்தில் கொடுத்து வழக்கினை பதிவு செய்துள்ளார் என்பதையும் கூடுதலாக பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் வாக்குகளை சேகரிக்க துவங்கியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சி என்பதால், காழ்ப்புணர்ச்சியில் கூட இந்த சம்பவம் நடைப்பெற்று இருக்கலாம் என்றவாறும் அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வேறு சிலர் எதிர்ப்பு அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலில் மட்டுமே தங்கள் இருப்பை அதிகரிக்கும் முறையை பாசக தஞ்சை பகுதியிலும் செய்ய துவங்கியுள்ளார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க காவல்துறை பல இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்தி அனைவரின் பாதுகாப்பையும் உறுதிச்செய்ய வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. இனி வரும் நாட்களில் கூடுதல் கவனத்துடன் தமிழக காவல்துறை செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
—
செய்தி உதவி
ரியாஜ், அத்திக்கடை.
செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி.