தமிழ்மொழிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் சகோதரர் இங்கர்சால் அவர்கள் ஜகமே தந்திரம் படத்திற்கான விமர்சனத்தை தனது சமூக ஊடக கணக்கில் முன்வைத்துள்ளார். அதை தங்களுடன் இங்கு பகிர்கிறோம்.
எங்களை ஆதரித்து எடுக்கும் படங்கள் தடை செய்யப்படும். எங்களை தீவிரவாதிகளாகக் காட்டி எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம், எங்களை இழிவு படுத்தி தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் படங்கள் என்றுமே தடைக்கு உள்ளானது இல்லை. அந்த விதத்தில் எந்த தடையும் இல்லாமல் ஒட்டுமொத்த விஷத்தையும் உலகுக்கு பரப்ப திட்டமிடப்பட்டு நெட்பிளிக்சில் வெளியிடப் பட்டிருக்கிறது ஜகமே தந்திரம்.
ஓரிரு வசனங்களை தூக்கி உயர்ந்த படம் என்று உலாவரும் உறவுகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இவர்கள் என்றுமே நமக்கானவர்கள் அல்ல ஆனால் நமக்கானவர்கள் போல வேடமிட்டு வருவது தான் வேடிக்கை பார்க்கும் பலருக்கு தெரிவதில்லை. மணிரத்தினம் முதல் கார்த்திக் சுப்பராஜ் வரை அரசுக்கு வாலாட்டி விசுவாசம் காட்டி வருகிறார்கள்.
படத்தில் பல இடங்களில் கதாநாயகன் பேசும் வசனம் இந்திய ஒன்றிய திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் பேசும் வசனம் போல அமைந்திருக்கிறது. அவை அனைத்தும் ஒட்டுமொத்த தமிழினத்தை இழிவு செய்யும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
‘’உங்க புலிகள்&கோ’’ என்று தலைவரிடம் சாதாரணமாக பேசுகிறான் சுருளி. தம்மாத்தூண்டு அறிவு வைத்திருக்கும் கூட்டத்தின் தலைவன் என்று அவர்களுக்கு நடுவே நின்று பேசுகிறான் சுருளி. அதாவது முட்டாள் கூட்டத்தின் தலைவன் என்கிறான் கார்த்திக் சுப்புராஜ்.
ஏமாறுவது உங்கள் தலைவரின் தொழிலா என்கிறான். உங்கள் தலைவன் பெரிய ஆள் என்றால் அவனை ஒரே வாரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நாங்க அதை விட பெரிய ஆள் என்று நம் காசில் நக்கிப் பிழைக்கும் நாய் நக்கல் வசனம் பேசுகிறான்.
போகிற போக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்து ஜெயிலில் இருக்கிறான் என்று காமெடி கதாபாத்திரம் கருத்து பேசுது. வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஆயுத கடத்தல் என்று அடுக்கடுக்காக இயக்கத்தின் மீது குற்றச்சாட்டை ஆழமாக வைக்கிறான் இயக்குனர்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் அத்தனை வக்கிரம் இருக்கிறது வசனத்தில். எல்லாரையும் துப்பாக்கியால் கொள்ளும் வில்லன் இயக்க தலைவர் கதாபாத்திரத்தில் வரும் சிவதாசை மட்டும் அரிவாளால் வெட்டிக் கொள்ளும் காட்சி இயக்குனரின் தமிழினம் மீதான வெறுப்பு உணர்வின் உச்சம்.
ஆறாம் அறிவு சரிவர வேலை செய்யும் அனைவருக்கும் இவைகளை பார்க்கும் முதல் முறையே தெரிந்துவிடும். இதில் மிக நுட்பமாக ஒரு விஷக் கருத்து விதைக்கப்படுகிறது அதை குறித்து எழுத வேண்டும் என்று தான் இதனை எழுதுகிறேன்.
அதாவது உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் மீது வெள்ளை இனவெறியை திருப்பி விடுகிறது இந்த திரைப்படம். BLACK LIVES MATTER போல #BROWN_LIVES_MATTER என்ற நிலையை உருவாக்க அடித்தளம் போடுகிறது.
இனவெறியை தூண்டும் வண்ணம் வெள்ளைக்காரர்களை எதிரிகளாக சித்தரிக்கிறது. இதனை பார்க்கும் சராசரி வெள்ளைக்காரன் கண்டிப்பாக நம்மீது ஏதோ ஒரு விதத்தில் வன்மம் கொள்வார். இது உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் இருப்பிற்கு மிகவும் ஆபத்தான கருத்து. இவ்வாறான இனவெறியை தூண்டும் திரைப்படத்தை அனைத்து தளத்திலும் தடைசெய்ய வேண்டும்.
இந்த படத்தில் ஒரு ஓர் உட்கருத்து விஷம் இருக்கிறது. படத்தின் கதைதான் கார்த்திக் சுப்புராஜின் திட்டமும் அதாவது சுருளி வைத்து பீட்டர் போடும் திட்டம் தான் தமிழர்களை வைத்து கார்த்திக் சுப்புராஜ் போடுகிறான்.
அதாவது சுருளியை ஆதரிப்பது போல ஆதரித்து அவனை வைத்து அகதிகளுக்காக குடியேறிகளுக்காக போராடும் ஒரு தலைவரை கொலை செய்ய திட்டமிடுகிறான் படத்தின் வில்லன் பீட்டர். அப்படி சுருளி அந்த தலைவனை கொன்றுவிட்டால் அந்தப் பழியை ஒட்டுமொத்த தமிழ் இனம் மீதும் போட்டு குடியேற்றத்திற்கான தடை சட்டத்தை கொண்டுவர திட்டமிடுகிறான் வில்லன்.
அதாவது நமக்காக உதவி செய்பவரை நம்மை வைத்தே கொன்று அந்த கொலை குற்றத்தை நம் மீது சுமத்தி அதை காரணம் காட்டி இனி நாம் எங்குமே வாழ முடியாத நிலையை உருவாக்குவது.
இதைத்தான் இயக்குனர் இந்த திரைப்படத்தில் செய்திருக்கிறான். அதாவது நமக்கு ஆதரவு தருவது போல ஆதரவு தந்து. நமக்கு ஆதரவு தரும் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நம்மை திருப்பிவிட்டு. அதனால் வரும் வெறுப்புணர்வை நம் மீது திருப்பி நமது வெளிநாட்டு இருப்பை இல்லாமல் செய்வது. இதை இயக்குனர் மிக நுட்பமாக செய்திருக்கிறார்.
நாங்கள் பிரிட்டிஷ் என்ற ஒரு இனவெறி அமைப்பு இருக்கிறது அதனை காட்டாமல் வெள்ளைக்கார இனவெறி என்று ஒட்டுமொத்த வெள்ளைக்கார தேச மக்களையும் தமிழர்கள் மீது திருப்பும் திரைப்படம் இது. அனைத்து சட்டத்தையும் மதித்து சிறந்த குடிமகனாக வாழும் தமிழர்களை அரசை ஏமாற்றி வாழும் மக்களாக சித்தரித்து எடுக்கப்படும் இவ்வாறான திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஆஸ்லோவில் 10 மருத்துவருக்கு ஒரு மருத்துவர் தமிழர் என்று நிலை இன்று உருவாகியிருக்கிறது அப்படி வளர்ந்து வரும் இளைய தலைமுறை மீது வெள்ளை இனவெறியர்களை ஏவி விடும் முயற்சி இது.
எச்சில் பாத்திரத்திற்கு கொடுத்த மரியாதை கூட எங்களுக்கு கொடுக்கப்படவில்லை இந்த திரைப்படத்தில். இந்த திரைப்படம் அழிக்கப்பட வேண்டும். ஜகமே தந்திரம் படத்தை தடை செய்ய அனைவரும்கரம் கோர்த்து குரல் கொடுங்கள்.
—
இங்கர்சால்,
நார்வே.
பதிவு முகவரி: https://www.facebook.com/ingersol.selvaraj/posts/4171635462874445