Home>>இதர>>பலியான விவசாய தொழிலாளி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்
இதர

பலியான விவசாய தொழிலாளி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

கோட்டூர் அருகே 83, குலமாணிக்கம் ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து விவசாய தொழிலாளி பலி, மனைவி படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 83 குலமாணிக்கம் ஊராட்சி கிராமத்தில் வசித்து வந்த விவசாய கூலித்தொழிலாளியான மாரிமுத்து என்பவரும் அவரது மனைவி சுந்தரம்பாள் இருவரும் தங்களது கூரை வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது (18/10/2021) அன்று இரவு 9 மணி அளவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக பக்கத்தில் குடியிருந்த மு.அருமைக்கண்ணு என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்து (1)மாரிமுத்து த/பெ சுப்பன், (2) சுந்தரம்பாள் க/பெ மாரிமுத்து ஆகிய இருவரும் பலத்த காயம் என்ற செய்தி கேள்வி பட்ட திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.

சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே விவசாய தொழிலாளி மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். அவரது மனைவி சுந்தரம்பாள் படுகாயங்களுடன் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விடியற்காலை வரை சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடன் இருந்தார்.

இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள், 83 குலமாணிக்கம் ஊராட்சியில் சுவர் இடிந்து விழுந்து பலியான விவசாய தொழிலாளி குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் அம் மனுவில் ‘சுவர் இடிந்து இறந்து போன விவசாய தொழிலாளி குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் வழங்கிடவும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று அவரது மனைவி சுந்தராம்பாள் அவர்களது மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளவும், இறந்து போன விவசாய தொழிலாளி மாரிமுத்து அவர்களின் வீட்டிற்கு அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்கிடவும், அதோடு திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இதுபோன்ற சேதமடைந்த நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது பருவமழை காரணமாக இது போன்ற வீடுகள் இடிந்து விடும் அபாயம் உள்ளதால் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி கணக்கெடுப்பு நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தர அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆறுதல் கூறியதோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரண தொகையினை சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து வழங்கினார். அப்போது கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோட்டூர் ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி குப்புசாமி, கிளைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
19/10/2021

Leave a Reply