பிடிஆர் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அது தேர்தல் அறிக்கையில் இருந்தது அவருக்குத் தெரியாது. அவரு வங்கியில் வேலை பார்த்ததை பொருளாதார நிபுணத்துவம் என்று சவுக்கு சங்கர் கண்கள் விரிய நடனமிட்டுக் கூறுகிறார். பன்னாட்டு நிறுவனங்களின் CEOக்கள் பெரும்பாலும் நார்சிஸ்டுகளே. அதனால் நான் எப்படிப் பட்ட ஆள் தெரியுமா? என்று கூறுவது வியப்பில்லை.
சரி அது இருக்கட்டும் இராஜஸ்தான் மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு ஆயுள் காப்பீடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதை தமிழக இந்து பதிப்பில் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் செய்கிறார்கள். அதுவும் துதியில் குலோத்துங்குவை விட்டுவிட்டார் என்று கூறாமல் இராஜஸ்தான் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதை நடைமுறை செய்வதாக மட்டுமே.
சத்தீஸ்கர் அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விட்டது. ஸ்வீடனுக்கு இணையாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறும் ஆழி செந்தில்நாதன் போன்றோர் தமிழகத்தின் பிராண்ட் எந்த அளவுக்கு இருக்கிறது என்று விதந்தோதும் போது இராஜஸ்தான் சத்தீஸ்கர் அரசுகளின் ஓய்வூதிய திட்டம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும்.
ஓய்வூதியம் பற்றி முதியோர்கள் மனநிலை பற்றி சிந்திக்கும் திறன் இப்போது தேவை.
—
எழுத்தாளர் இளங்கோ கல்லானை.
—
செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.