Home>>விளையாட்டு>>உலகக்கோப்பை கிரிக்கெட்-ஹாட் ட்ரிக் சாதனைகள்
விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்-ஹாட் ட்ரிக் சாதனைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் ஹாட் ட்ரிக் சாதனைகள் ஒரு பார்வை.

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தெறியும் ஆட்டக்காரர்(Bowler) ஒருவர், தொடர்ந்தாற்போல் தான் எறிகின்ற மூன்று பந்தெறி வாய்ப் பிலும், மூன்று ஆட்டக்காரரையும் ஆட்டம் இழக்கச் செய்வதற்கு (Out) ஹேட்டிரிக் என்பது பெயராகும்.

மூன்று பந்தெறி வாய்ப்பிலும் மூன்று ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு Hat trick என்று ஏன் பெயர் வந்தது என்றால், அந்தச் சொல் உருவாவதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் இருந்தது.
இங்கிலாந்தில் 1858ஆம் ஆண்டுதான் இந்தச் சொல் ஏற்படக் காரணமாக அமைந்திருந்தது.
1858 ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் H.H.ஸ்டெப்ஹென்சன் என்பவர் முதன்முதலாக மூன்று பந்துகளில் மூன்று விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்..அந்த சாதனையை கௌரவிக்கும் விதமாக ரசிகர்கள் அவருக்கு தொப்பியை நினைவுப்பரிசாக வழங்கினர்.

H.H.stephension
H.H.stephension.

அந்த நாட்டில் உள்ள ஒரு சில கிரிக்கெட் சங்கங்களில் இவ்வாறு திறமையாகப் பந்தெறிந்து சாதனை புரிந்த பந்தெறி ஆட்டக்காரரைப் பாராட்ட, விளையாடும் பொழுது தலையில் அணிந்து கொள்ளும் தொப்பி (Hat) ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டினார்கள்.
அவ்வாறு தொப்பிப் பரிசளிக்கும் பழக்கம் 1858ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தது.
பின் 1865 ல் தான் ஹாட் ட்ரிக் என்ற வார்த்தை பத்திரிக்கைகளில் வந்தது.பின் இந்த வார்த்தை ஹாக்கி ,கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளிலும் இடம்பெறத் தொடங்கியது
தற்போது ஹாட்டிரிக் சாதனை புரிபவர்களுக்குத் தொப்பிப் பரிசளிப்பது இல்லையென்றாலும், அந்தப்பெயர் மாறவில்லை.

ஹாட் ட்ரிக் என்பது மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த மூன்று பந்துகள் ஒரே ஓவரில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. முந்தைய ஓவரில் 5 மற்றும் 6 வது பந்துகளில் விக்கெட் எடுத்துவிட்டு பின் அடுத்த ஓவர் முதல் பந்தில் விக்கெட் எடுத்தாலும் அதுவும் ஹாட் ட்ரிக் என்றுதான் அழைக்கப்படுகிறது ஆனால் அது ஒரே ஆட்டத்தில் நிகழ வேண்டும். அடுத்த ஆட்டத்திற்கு கொண்டு செல்லப்படாது
8 வது உலககோப்பை திருவிழா தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது..
இது போன்ற தொடரில் வெற்றி தோல்விகள் மட்டுமல்ல சில சாதனைகளும் அடிக்கடி அரங்கேறும்..
அதில் இன்று நாம் வியத்தகு சாதனை ஒன்றை பார்க்க போகிறோம்..

பந்து வீச்சாளர்கள் 2,3 விக்கெட் எடுப்பதே பெரிதாக கொண்டாடும் நிலையில் தொடர்ந்து தான் வீசும் 3 பந்துக்களும் விக்கெட் என்றால் எவ்வளவு பெரிய கொண்டாட்டம்..

இந்த நிகழ்வு போட்டிகளில் அவ்வப்போது நடக்கும்.ஆனால் உலகமே உற்று நோக்கும் உலககோப்பைத் தொடர்களில் இந்த சாதனை நிகழ்த்தியவர்களின் பெயர்களைதான் இதில் பார்க்கப்போகிறோம்..

50 ஓவர் உலககோப்பை போட்டிகள் 1975 இல் இருந்து நடைபெற்றாலும் இந்த சாதனை முதன் முதலாக 1987ல் நடந்த உலககோப்பை போட்டியில்தான் முதன்முதலாக
நடந்தது.இந்தியாவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சேட்டன் சர்மா எனபவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்து 12 வருடங்களுக்கு பிறகு 1999 இல் பாகிஸ்தான் வீரர் ஷக்லைன் முஸ்தாக் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும்,

2003 இல் ஆஸ்திரேலியாவின் சூறாவளி பிரெட் லீ , கென்யாவுக்கு எதிராகவும்,

அதே உலககோப்பையில் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்த சாதனையை செய்தனர்.

2007 மற்றும் 2011 இரண்டு உலககோப்பையிலும் இலங்கையின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா தென் ஆப்பிரிக்கா, கென்யா அணிகளுக்கு எதிராகச்செய்தார்.

2011 உலககோப்பையில் வெஸ்ட் இண்டிஸ் அணியைச்சேர்ந்த கேமர் ரோச் நெதர்லாந்து அணிக்கு எதிராகவும்,

2015 உலககோப்பையில் ஜேபி டுமீனி இலங்கைக்கு எதிராகவும்,

2019 உலககோப்பையில் இந்திய அணி வீரர் முஹம்மது சமி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும்,

நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நிகழ்த்தி காட்டினார்.

இது 50 ஓவர் கோப்பைக்கான பட்டியல் அடுத்து 2007 முதல் நடைபெற்ற வரும் இருபது ஓவர் உலககோப்பை போட்டிகளில் இந்த அற்புதத்தை படைத்தவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

2007 இல் ஆஸ்திரேலியாவின் பிரட் லீ வங்கதேச அணிக்கு எதிராக செய்தார். இவர் 2003 உலககோப்பையிலும் ஹாட்ரிக் சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 14 வருடங்களுக்கு பிறகு இருபது ஓவர் உலககோப்பையில் யாரும் எதிர்பாராத வகையில் அயர்லாந்து வீரர் ஹர்டிஸ்
கேம்பர் , நெதர்லாந்து அணிக்கு எதிராகவும்,

அதே தொடரில் இலங்கையின் ஹசரங்கா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும்,

தென் ஆப்பிரிக்காவின் ரபாடா , இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் செய்தனர்.

நடப்பு 2022 8வது கோப்பையில் இன்று UAE அணியை சேர்ந்த தமிழக வீரர் கார்த்திக் மெய்யப்பன் பலம் வாய்ந்த இலங்கை அணிக்கு எதிராக ஹாட் ட்ரிக் சாதனை செய்து உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்…

இன்னும் 40 போட்டிகள் உள்ள நிலையில் இதில் இன்னும் யார் யார் பெயரெல்லாம் இணையப்போகிறது என்று பார்ப்போம்.

-ஆனந்த் ரெய்னா

Leave a Reply