Home>>கலை>>மன்னார்குடி ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள்.
கலைகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள் இன்று (30.11.2022) கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணாக்கர்களும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக பங்குபெற்றார்கள்.

மேலும் நிகழ்வில் மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.தலையாமங்கலம் பாலு அவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் திரு.சௌந்தரராஜன் அவர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.முத்தமிழன் அவர்கள், திரு. தாமோதரன் அவர்கள் மற்றும் மேற்பார்வையாளர் திரு.தனபால் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமையாசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply