Irctc என்னும் இந்திய ரயில் போக்குவரத்து இணைய சேவை செய்யும் அட்டூழியங்கள் பற்றி ஒரு சாமானியனின் பார்வை.
பயணிகள் எளிதாக பயணச்சீட்டு பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு சேவை தான் இந்த irctc.
ஆனால் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் வர வர மோசமாகிக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக ரயிலில் ஒரு பயண சீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. எப்போதுமே காத்திருப்பு பட்டியல் மட்டுமே வரும். அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே வேணாம்.
இந்த நிலையில் தான் பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்பு பயண சீட்டு பதிவு செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு சேவை தான் tatkal(தட்கல்).
சராசரி கட்டணத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும் இருந்தாலும் ஏதோ பயண சீட்டு கிடைத்தால் பரவாயில்லை என்ற நோக்கில் பலர் இதைத் தேர்வு செய்கிறார்கள்..
அவர்களின் இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு அந்த சேவை இந்த சேவை என பலவற்றையும் அவர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். இருந்தாலும் எப்படியோ சீட்டு கிடைத்தால் பரவாயில்லை பேருந்தில் பயணிப்பதை விட இதில் மலிவு தானே என்ற நிலையில் பலர் இந்த சேவையை தேர்வு செய்கின்றனர்.
ஆனால் இதில் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் நாம் அதை பாராட்டலாம்.
சாதாரண புக்கிங்ல சீட்டு இல்லாமல் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் தானே தட்கல் சேவைக்கு வருகிறார்கள்.
அப்படி இருக்க அதிகமான போட்டி நிலவும் பட்சத்தில் டிக்கெட் இல்லை என்றால் அது இல்லை என்று சொல்வதானே நேர்மை.
சரியாக காலை 11:00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சேவை ஒரே நிமிடத்தில் அனைத்து டிக்கெடுகளும் விற்று தீர்ந்துவிடும். நேரடியாக ரயில் நிலையத்துக்கு சென்றும் பெறலாம் அல்லது இணையதளத்தின் மூலம் பெறலாம். இரண்டுமே ரொம்ப கடினமான இலக்கு.
ஆகவே இத்தன நாள் எப்படி இருந்தது என்றால் கொஞ்சம் சில நொடிகள் தாமதித்தால் கூட அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காது. அதில் ஒரு அர்த்தம் இருந்தது கடுமையான போட்டி என்பதால் இந்த நிலை என்று.
ஆனால் பேராசை பிடித்த இந்த இந்திய ரயில்வே, தற்போது நூதன முறையில் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தட்கல் சேவையில் முன்பு டிக்கெட் இல்லை என்றால் உங்களால் பணம் கட்டவே முடியாது . டிக்கெட் இல்லை என்று பதில் வந்து விடும் . இதனால் உங்கள் பணத்திற்கும் ஆபத்தும் இல்லை ஒரு முயற்சி மட்டும் தோல்வியடையும் .ஆனால் தற்போது டிக்கெட் இருக்கோ இல்லையோ உங்கள் பணம் பிடிக்கப்பட்டு விடும். பணம் கட்டிய பின்னரே உங்கள் நிலை தெரிவிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி.
இது என்ன அயோக்கியத்தனம். சாதாரண புக்கிங்கில் காத்திருப்பு பட்டியல் அதிகமா இருப்பதால் தானே தட்கலுக்கு வருகிறார்கள். அப்படி இருக்க அங்கேயும் காத்திருப்பு பட்டியல் என்றால் அவர்கள் ஏன் டிக்கெட் போடப் போகிறார்கள்?? அதை முன்பே அவர்களுக்கு சொல்ல வேண்டியது தானே??
சரின்ன்னு டிக்கெட் கேன்சல் பண்ணா முழு பணம் வருகிறதா என்றால் அதுவும் இல்ல. ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 60ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் இது குறைந்த பணம் போல தோன்றும். ஆனால் ஒருவருக்கு தெரியாமல் அந்த பணத்தை திருடுவது என்பது தவறு. ஒருவர் தெரிந்தே காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் புக் செய்யும் போது அப்பொழுது டிக்கெட் கேன்சல் செய்தால் பணம் கழிக்கப்படுவது பிரச்சனை இல்லை.
ஆனால் ஒருவருக்கு தெரியாமல் அவர்களை அவசரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு இதுபோல பணத்தை கொள்ளை அடிப்பது என்பது பெரும் குற்றம்.
இந்த குற்றத்தை தனியார் செய்தாலே பெரும் தவறு. அரசாங்கமே இப்படி செய்யலாமா?
இப்படி ஊர் பணத்தை எல்லாம் கொள்ளை அடிச்சு அப்படி இவர்கள் என்னதான் சாதித்தார்கள்??
கொடுங்கோலாட்சியை விட மோசமாக இருக்கிறது இவர்கள் நிர்வாகம். ஏற்கனவே எதற்கெடுத்தாலும் வரிகளை மட்டுமே போட்டு நாட்டின் பட்ஜெட்டை நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில் இடையில் இப்படிப்பட்ட மோசடி கள் வேறு.
உண்மைய சொல்ல வேண்டுமென்றால் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த நிர்வாக நேர்மை கூட சுதந்திர இந்தியாவில் இல்லை
-மன்னை செந்தில் பக்கிரிசாமி