மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, வணிகர்கள் நலச்சங்கம் சார்பாக ஐயா வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலில் மன்னை நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வகுமார், நகர பொறுப்பாளர் ஜீவா திருநீலகண்டன் தலைமையில் கடையடைப்பிற்கான துண்டறிக்கை கொடுத்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனை ஒட்டி வணிகர்கள் தமது கடைகளை அடைத்து போராத்திற்கான ஆதரவை உணர்வோடு வெளிப்படுத்தினர். அதோடு மன்னை கடைத்தெருவில் பச்சை கொடிக்கட்டி போராட்டத்திற்கான தங்கள் ஆதரவை அரசிற்கு வெளிப்படுத்தினர்.
—
செய்தி சேகரிப்பு:
பிரசன்னா, மன்னார்குடி.
இராசசேகரன், மன்னார்குடி.