— வசந்தன், மன்னார்குடி
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் (ஆதிரங்கம்), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (கோவை) மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் (நீடாமங்கலம்) இணைந்து பாரம்பரிய நெல் திருவிழா 2020 நிகழ்வை சிறப்பாக இன்று (07/08/2020) ஒருங்கிணைத்துள்ளார்கள்.
இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர் மற்றும் 75 வகையான நெற்கள் கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது..
நிகழ்ச்சியில் தமிழக உணவு துறை அமைச்சர் திரு.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களில் விருந்தும் மருந்தும் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
படஉதவி: Vasa Photography