Home>>செய்திகள்>>உயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

உயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

சாலைகளில் மாடுகள் திரிந்தால் அபராதம் என்ற வெற்று அறிவிப்பு. நாய்களின் இனப்பெருக்கத்தை கூட கட்டுப்படுத்தப்படாமல் சாலையில் திரியும் எண்ணிலடங்கா நாய்கள். தெருக்களில் பன்றிகளை விடக்கூடாது என்ற தடையை கிடப்பில் போட்டுள்ள மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்.

குண்டும், குழியுமான வ.உ.சி. சாலையால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பின் அவதிப்பட்ட நகராட்சி நிர்வாகம். இம்முறை சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்‌, சுற்றித்திரியும் நாய்களால் வாகன விபத்தாலும், வெறி நாய்களாலும் உயிரிழப்பு ஏற்படும் முன்னர் இவைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பன்றிகளால் பிரிட்டானிகா, ஸ்வைன் ப்ளு, நிஃபா போன்ற கொடிய நோய்கள் பரவி உயிரிழப்பு ஏற்படும் முன்பாகவும், நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு மனித உயிர்களின் மதிப்பை புரிந்துக் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திரிந்து கொண்டிருக்கும் இவைகளை கட்டுப்படுத்தி தூய்மையற்ற மன்னார்குடியை, மனிதர்கள் வாழ தகுதியான தூய்மையான மன்னார்குடியாக மாற்ற வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கை.


செய்தி உதவி:
திரு. அமிர்தராஜா,
மன்னார்குடி.

Leave a Reply