Home>>இந்தியா>>73வது குடியரசு தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

73வது குடியரசு தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி உதவி ஆணையர் T.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, நாம் அனைவரும் மதம், சாதி, மொழி என வேறுபட்டு இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என்றும், வருங்காலம் மாணவர்களின் காலம் என்றும், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும், இந்த இனிய நாளின் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பேசினார்.

இளம் சிலம்ப மாணவி மோ.பி.சுகித்தா குழுவினரின் சிலம்பாட்டத்தை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசளித்தார்.

தேசிய கல்லூரி பேராசிரியர் மற்றும் சிலம்பக் கோர்வை துணை தலைவர் முனைவர் என்.மாணிக்கம் அவர்கள் வரவேற்று பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழக துணை தலைவர்கள் என்.கே.ரவிச்சந்திரன், பி.ராஜ்குமார், எம்.ஆர்.எம். பேச்சு பயிற்சி இயக்குனர் சுந்தரேசன் மற்றும் ஏராளமான சிலம்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் இந்திய சிலம்பக் கோர்வை கழக தலைவர் இரா.மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுப்பெற்றது.


செய்தி உதவி:
திரு. மோகன்,
திருச்சி.

Leave a Reply