குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரத்தீஸ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் Nna than case kodu என்ற மலையாள படம் இன்று hot star ott தளத்தில் வெளியாகியுள்ளது.நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஒருமுறையாவது அவசியம் பாருங்கள்.
இது என் வேண்டுகோள் 🙏🙏🙏🙏.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதை எல்லாம் தாண்டி இந்த படத்தைப் பார்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று எண்ணுகிறேன்.
இப்படி ஒரு படம் தமிழில் வாய்ப்பே இல்ல. ஏற்கனவே நயட்டு படம் பார்த்த பின்னும் இதைத்தான் சொன்னன்.இது அதை விட இன்னும் அருமை.
மலையாள படங்கள் என்றாலே நம்பி பார்க்கலாம். அதிலும் குஞ்சாக்கோ போபன் என்றால் சொல்லவே வேண்டாம்.
Take off, வைரஸ்,வேட்டை,அஞ்சாம் பாத்திரா,நிழல் ,நயட்டு ,படா என மிக குறுகிய காலத்தில் எண்ணற்ற பல நல்ல தரமான படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த நான்தான் கேஸ் கொடு படம் உச்சம் என்று சொல்லலாம்.
இது போன்ற படங்கள் கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தோன்றும்படி சில கதைகள் அமையும். அவை பெரும்பாலும் மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளாகும். உதாரணமாக லஞ்சம், ஊழல், வேலைவாய்ப்பின்மை இது போன்ற பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு வரும் படங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பு தரும்.
ஆனால் தமிழில் அது போல வரும் படங்கள் பெரும்பாலும் சினிமாத் தனமாகவே இருக்கும். தனிப்பட்ட ஒருவரின் பராக்கிரமத்தை போற்றக்கூடிய வகையில் இருக்கும். இந்தியன் , ரமணா,முதல்வன் போல.
ஆனால் இவை எல்லாத்தையும் விட மக்கள் தினமும் சந்திக்கும் அன்றாட ஒரு பிரச்சனை தரமற்ற சாலைகள். இதையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதபடி மிக நீண்ட காலமாக மக்கள் மத்தியில் பழகிவிட்டது. மோசமான சாலைகளுக்கு ஏற்றவாறு தன் வாகனத்தை இயக்க கற்றுக் கொண்டு விட்டார்கள்.
அப்படிப்பட்ட இந்த தரமற்ற சாலைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். தினசரி விபத்துக்கள் என்று பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. அவை பெரும்பாலும் குடிபோதையில், அதிவேகத்தில் பயணிப்பதால் வருவது போன்று சிந்திக்கப்படும். ஆனால் உண்மையில் தரமற்ற சாலைகளால்தான் பல விபத்துக்கள் நடக்கின்றன .அவை யாவும் மூடி மறைக்கப்படுகின்றன. ஏனென்றால் அதைக் கிளற ஆரம்பித்தால் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பின் கோரமுகம் வெளிப்படும். இந்த படத்தில் மிக தெள்ளத்தெளிவாக அந்த கோர முகத்தை அனைவருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். சாலையில் உள்ள ஒரு குழியின் காரணமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் மறைமுக காரணமாக குஞ்சாக்கோ போவன் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அது என்ன சிக்கல் ,அதிலிருந்து அவர் எப்படி வந்தார், சாலைகளில் குழிகள் ஏன் ஏற்படுகிறது? ஏன் அதை சரிவர பராமரிக்கவில்லை என்ற உண்மைகள் போகப் போக தெரிகிறது.
அந்த சாலையின் குழிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? குஞ்சாக்கோக்கு நீதி கிடைத்ததா என்பது தான் படம்.
Court drama என்று சொல்லப்படும் நீதிமன்ற வாதங்களை வைத்து எடுக்கப்படும் மலையாள படங்கள் ரொம்பவே தனித்தன்மையோடு சிறப்பாக இருக்கும். சமீபத்தில் வந்த ஜன கன மன மற்றும் வாசி போன்ற படங்களை சொல்லலாம்.
அந்த வரிசையில் இந்த படம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது எனலாம். ஒரு வழக்கு முடிய ஆகும் கால அளவுகள் ரொம்பவே சிறப்பாக காட்டப்பட்டுள்ளன இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் குஞ்சாகோவின் மனைவி காயத்திரி , குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு இரண்டு வயசாகும் போது தான் தீர்ப்பு கிடைக்கிறது. அந்தக் கால இடைவெளியை மிகசிறப்பாக காட்டியுள்ளார்கள்.அதுதான் மலையாள சினிமா..
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது படம் அல்ல. பார்ப்போர் அனைவருக்கும் ஒரு பாடம். சாலைப்போக்குவரத்து ஊழல் என்பது கொஞ்ச நஞ்சம் அல்ல. மற்ற ஊழல்கள் கூட நேரடியாக மக்கள் கண்ணில் படாது.ஆனால் இந்த சாலை ஊழல் என்பது தினசரி நம் அனைவரின் கண்களில் பட்டும் நாம் அதை ஏற்றுக்கொண்டு கடந்து தான் சொல்கிறோம்.
அதையும் மீறி யாராவது கொந்தளித்தால் “முடிஞ்சா போய் கேஸ் கொடு” என்று சொல்வார்கள்.
அப்படி ஒருவர் கேஸ் கொடுத்தால் என்ன ஆகும் என்பது தான் இந்த படம்.
படம் ஆரம்பத்தில் நகைச்சுவையாகவே செல்கின்றது மிக மிக அற்ப காரணத்திற்காக ஒருவர் கோர்ட்டுக்கு சொல்கிறார் என்பது போல தான் படம் நகர்கிறது. ஆனால் அது இறுதியில் அமைச்சர் வரை பாதிக்கிறது என்பதை வழக்கமான மலையாள பட பாணியில் மிக சுவாரசியமாகவும் மிக யதார்த்தமாகும் தத்ரூபமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மைய சொல்ல வேண்டுமானால் இப்படி ஒரு படம் இங்கேதான் எடுக்க வேண்டும் ஒப்பீட்டளவில் கேரளாவை விட தமிழ்நாட்டில் சாலைகள் படுமோசமாக உள்ளன. இருந்தும் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவது போல தெரியவில்லை. சாலைகள் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று நம்ப வைத்து விட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தயவு செய்து இந்த படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மோசமான சாலை ஊழல் அரசியல் தரமற்ற சாலைகள் பின்னே எப்படி பூதாகரமாக உள்ளது என்று தெரியும்.
சில படங்களை அவசியம் பாருங்கள் என்று சொல்லுவோம் ஆனா இந்த படத்தை பார்த்தே தீருங்கள் என்று மன்றாடி கேட்கலாம்.அந்த அளவுக்கு இந்த படம் உள்ளது..
தமிழில் தான் உள்ளது.எனவே subtitle இல்லாமலே பார்க்கலாம்..
Must must must must watch movie.
நம் வாழ்வில் அவசியம் காண வேண்டிய படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் இந்த படம்.
5 ஸ்டார் ரேட்டிங் கூட கொடுக்கலாம்.
மன்னை செந்தில் பக்கிரிசாமி