Home>>அரசியல்>>அந்தணர் – பிள்ளை பட்டம் சூட்டும் விழா பல தடைகளையும் மீறி வெற்றிகரமாக நடந்தது.
அந்தணர்-பிள்ளை பட்டம் சூட்டும் விழா பல இடையூறுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

அந்தணர் – பிள்ளை பட்டம் சூட்டும் விழா பல தடைகளையும் மீறி வெற்றிகரமாக நடந்தது.

அந்தணர் – பிள்ளை பட்டம் சூட்டும் விழா பல தடைகளையும் மிரட்டல்களையும் மீறி வெற்றிகரமாக கோட்டூர்புரம் அம்பேத்கர் பவனில் நடந்தது.

திரு. செ.கு.தமிழரசன் வரலாற்றுப்பூர்வமாக நல்லுரையை ஆற்றினார். அவருக்கு அன்னை மீனாம்பாள் தான் தமிழரசன் என பெயர் சூட்டினார் என சொன்னார். அந்த தகவல் எனக்கு ஆச்சர்யமளித்தது. அன்னை மீனாம்பாள் அவர்களின் தந்தை மதுரைக்கு பிள்ளை பட்டம் இருந்ததிலிருந்து பரையர் சமூகத்தில் பலருக்கு பிள்ளை பட்டம் வந்த வரலாற்றைச் சொன்னார்.
இசை வேளாளர் சமூகம் தனக்குத் தானே எவ்வாறு பிள்ளை பட்டத்தைச் சூட்டிக்கொண்டு தமிழரோடு கலந்தனர் என்பதை விரிவாகச் சொன்னார்.

ஐயா ம.சோ.விக்டர் பரையர் சமூக வரலாற்றையும் சாதிக்குள் பரையர் வந்த வரலாற்றையும் சொன்னார். பரையர் என்றால் பார்வதியின் பிள்ளைகள் என்றும் அர்த்தப்படும் என்றார்.
ஆனால் சூத்திரர்கள், தலையில் இருந்து பிறந்தவன், தோளில் இருந்தவன் கதையெல்லாம் நம்புவர். ஆனாக் பார்வதியின் பிள்ளை என்ற கதையை மட்டும் நக்கல் செய்வர் என்றேன் நான்.
வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது காலத்தின் தேவை. செய்கிறவர் மீது கல்லெறிகிறவர்கள் எரியுங்கள். பூத்தூவுகிறவர்கள் தூவுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் வரலாற்றை மறைக்க முடியாது.


செய்தி உதவி:
திருமதி. நாச்சியாள் சுகந்தி,
ஊடகவியலாளர்,
சென்னை.

Leave a Reply