Home>>அறிவியல்>>இறந்த உடலில் “புழுக்கள்” தோன்றுவது எப்படி??
அறிவியல்உடல்நலம்

இறந்த உடலில் “புழுக்கள்” தோன்றுவது எப்படி??

Covid 19 கொரோனா கிருமியால இப்ப ஊரே பயத்தோட இருக்கு. எங்க பாத்தாலும் பரவுது.பல உயிர் இழப்புகள். இது எங்க போய் முடியும்ன்னு யாருக்கும் புரியல. இந்த சீனப் பயபுள்ளக என்ன வேலை பாத்துபுட்டு. நல்லா இருந்த உலகத்தை இப்படி ஒரு கிருமியை பரப்பி விட்டுட்டு நாசமா ஆக்கிடான்னுங்களேன்னு எல்லாருக்கும் செம காண்டு ஆகி இருக்கும். உலகமே சீனா மேலே செம கடுப்புல இருக்கு. இதுல இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை வேற. அதுல இன்னும் அதிக கடுப்பு. இந்த கிருமிங்க தொல்லை தாங்க முடியல, இதை எப்படியாவது அழிக்கனும்ன்னு நம்ம எல்லாருக்கும் தோன்றும்.

ஆனால் இந்த உலகத்தில உயிரைக்கொல்லும் கிருமிகள் மட்டும் அல்ல. உயிர் காக்கும் எண்ணற்ற நுண்ணுயிர்கள் கூட உள்ளன. இந்த உலகமே கிருமிகள் சூழ் உலகம் தான்.

உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள், கிருமிகள் என்னும் பொதுப்பெயரால் சுட்டப்படுகின்றன. கிருமிகளின் இயல்பைப் பொறுத்து அவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகை பாக்டீரியா, இன்னொரு வகை வைரசு.

நுண்ணுயிருக்கும் கிருமிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் Bacteria – நுண்ணுயிர் – ஒரு உயிரணு உள்ளது.

Virus – கிருமி – உயிரணு இல்லாதது. இது அட்டை போல் உயிரணுவில் ஒட்டி கொண்டே அதன் வேலையை செய்ய முடியும்.மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

மனிதர்களை பொறுத்தவரை, நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உள்ளன, தீமை செய்பவையும் உள்ளன. நன்மை செய்யும் சில பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உடலில் பெருகிவிட்டால், அவற்றின் செயல்பாடு நோய்களாக வெளிப்படுவதும் உண்டு. இந்த பாக்டீரியாக்கள் நுண்ணுயிர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். ஏன் நம் எல்லாருக்குல்லேயும் இருக்கு. உண்மையை சொல்லணும்னா நம்மை வாழ வைப்பது அவைகள் தான். இந்த உலகத்தின் மறுசுழற்சிக்கு அவற்றின் பங்கு முக்கியம். அப்படி இயற்கையிலேயே உள்ள நுண்ணுயிர் களால் நடக்கும் சில மாறுதல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நுண்ணுயிர்கள் என்பது நாம் பிறந்தது முதல் இறப்பது வரை எண்ணற்ற அளவில் நம் உடலிலேயே இருக்கும். நம் மூக்கு, வாய் என பரவி இருக்கும். இதே போல் வைரஸ் கிருமிகள் நம்மை தாக்கும் போது அவைகளும் அதே போல் இருக்கும். இதனால் தான் ஒருவருக்கு வரும் நோய், வாய் மூக்கு வழியாக அவர்கள் கை களுக்கு பரவி அடுத்தவரை தொடும் போது பரவுகிறது. தற்போதைய சூழலில் முகக்கவசம் போட காரணம் அது தான்.

நம் உடலில் உள்ள நுண்ணுயிர்களை ஆங்கிலத்தில் பாக்டீரியா என்பார்கள் இவைகள்தான் நம் உடலில் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கும், நம் உடலை வைரஸ் கிருமிகள் வெளியிலிருந்து தாக்கும்போது அவைகளோடு சண்டையிட்டு நம் உடலை காப்பதற்கும் உதவுகிறது.

மனிதர்களின் நோய்களைப் பொறுத்தவரையில், பாக்டீரியாவுக்கும் வைரஸ்க்கும் இடையேயான முக்கியமான வேறுபாடு, ஆன்டிபயாடிக்ஸ் என்னும் எதிர் உயிரிகள் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியுமாம். ஆன்டிபயாடிக்ஸ்னால் வைரஸை அழிக்க முடியாதாம்.

இப்படி நாம உயிரோடு இருக்கும்போது நமக்கு காவலாக இருக்கும் இந்த நுண்ணுயிர்க்கிருமிகள் தான் நாம் செத்தபிறகு நம்மை சிதைத்து மட்க வைத்து மறு சுழற்சி செய்ய உதவுகின்றன.

நாம் உயிரோடு இருக்கும் போது நமக்குள்ள வாழும் இவை,நாம் இறந்த பின் அதுவரை நம் உடலில் உள்ள சத்துக்களில் வாழ்ந்த அவைகள் அதன் பின் தான் உயிர் வாழ நம் உடலில் உள்ள திட திரவ பொருட்களை உண்டு வாயுவாக மாற்றி ஒரு துர் நாற்றதோடு வெளியேறுகின்றன. இதனால் தான் இறந்தவர் வாயை யும் மூக்கையும் அடைத்து விடுகிறார்கள், வாயு நிலையில் வெளி வரும் அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உண்டு.

நம்மை தாக்காமல் இருக்க.பின் இந்த துர்நாற்ற வாயுவானது ஈக்கள் மற்றும் வண்டுபூச்சிகளை (beetle) கவர்ந்து இழுக்கிறது ஏறக்குறைய ஒரு சிக்னல் போல. உடனே ஈக்கள் உடலை நோக்கி வந்து விடுகின்றன. உடலை மொய்த்து அங்கேயே நமக்கு நல்ல இடம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. முட்டையிட்டு புழுக்கள் வெளி வருகின்றன. இவை எல்லாம் 2,3 மணி நேரங்களிலேயே நடந்து விடும். பின் புதிதாக பிறந்த அந்த புழுக்கள் அகோரப் பசியுடன் எப்படியும் தம்மை வளர்த்து விட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் நம் உடலின் தோலை குடைந்து உள்ளே சென்று நம் சதை களை உண்ணுகின்றன. இப்பிடித்தான் இறந்த உடலில் புழுக்கள் வாழ்கின்றன.

ஆனால் இது வெட்ட வெளியில் உள்ள உடலுக்கு பொருந்தும்.

அதே நேரத்தில் மண்ணில் புதைக்கப்படும் உடலை தேடி ஈக்கள் செல்ல முடிய வில்லை என்றாலும் வண்டுகள் குடைந்து செல்லும். அவை புழுக்களை பிறப்பித்து விரைவில் தின்று தீர்த்து விடும். ஆனால் இது வெட்ட வெளியில் உள்ளதை விட சில காலம் பிடிக்கும்.

ஒரு வேளை சவப்பெட்டி யில் அடக்கம் செய்யப்படும் உடல்களை ஈக்கள், பூச்சிகள் அவ்வாவு எளிதாக அண்ட முடியாது. எனவே நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மட்டுமே சிறிது சிறிதாக உடலை அழிக செய்து பின் முற்றிலும் சதைகளை உண்டு வெறும் எலும்பு மட்டுமே எஞ்சும். இது பல வருடங்கள் எடுக்கும்.

ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உடல்கள் அழுகிப்போவதில்லை. காரணம் இந்த நுண்னுயிர்கள் வாழ்வதற்கு தகுந்த வெப்பநிலை தேவை. பொதுவாக 20°c to 45°c தேவை. எனவே வெப்ப நிலை அதிகம் ஆக ஆக அல்லது குறைய குறைய அதனால் வாழ முடியாது. இதனால் தான் குளிர் சாதன பெட்டி யில் வைக்கப்படும் உடல்கள் அழிவதில்லை.

அதே போல் கிருமி நாசினியை உள் செலுத்தி அதன் மூலம் இந்த நுண் உயர்களை கொன்று உடலை பாதுகாக்கும் இன்னொரு முறை embalming.அதாவது எத்தனால் உள்ளிட்ட பல வேதிப்பொருட்களை கலந்து உடலின் உள்ளே செலுத்தி விட்டு உடலை அழுக செய்யும் நுண் உயிர்களை அழிப்பது.

இது உயிரினங்களுக்கு மட்டும் அல்ல.நாம் அன்றாடம் வாங்கும் காய்கறிகளுக்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டாக தக்காளியை எடுத்துக்கொள்ளுங்கள். அது மரத்தை விட்டுப் பறித்த உடனே இறந்து விடுகிறது. ஆனால் அதை நம் வீட்டு குளிர் சாதன பெட்டியில் வைப்பது மூலம் நீண்ட நாட்கள் வைக்கிறோம் .ஒருவேளை அதை வெளியில் வைத்தால் சில நாட்களில் அழுகிவிடும். காரணம் நாம் முன்பே நம் உடலுக்கு சொன்னது தான்.

ஆனால் நெறைய பேருக்கு இன்னொரு சந்தேகம் இருக்கும். இதெல்லாம் புரியுது. இதுல ஒரு logic இருக்கு. ஆனால் பூட்டிய டப்பாக்குள்ள உள்ள அரிசி, மாவுக்குள்ள எப்படி வண்டு வருதுன்னு??மாவுக்கும் அரசிக்கும் உயிர் ஏதுன்னு நமக்கு தோணும். ரொம்ப நல்ல சந்தேகம்.

நாம் முன்பே சொன்னது போல இந்த உலகம் கிருமிகள் சூழ் உலகம். காற்று உள்ள இடங்களில் ஈரப்பதமும் நுண்ணுயிர்க்கிருமிகள் இருக்கும்.ஏன் காற்றிலே இருக்கும். மூடிய பாத்திரம் என்பது வெற்றிடம் அல்ல. காற்று உள்ள இடம். எனவே அதில் அவைகள் இருக்கும். தனக்கென மாறுதல் இல்லாத ஒரு சூழலும் வெப்ப நிலையும் தொடர்ந்து ஒரே இடத்தில் கிடைக்கும் போது அவைகள் ஒரு உயிரை உண்டாக்கும் வல்லமை பெற்றது.போதாக்குறைக்கு உணவு வேற இருக்கும்.இதனால் தான் சிறிய புழுக்கள் உருவாகி அவை வண்டுகள் ஆகின்றன.

ஒருவேளை நாம் அடிக்கடி பாத்திரத்தை திறந்து திறந்து மூடும் போது அங்கே சூழல் மாறுதல் நிகழ்கிறது. புதிய காற்று உள்ளே செல்கிறது. பழைய காற்று வெளியேறி விடுகிறது. இதனால் அவை ஒரு உயிரை உருவாக்க ஏதுவான சூழல் இல்லமால் போய் விடுகிறது. ஓடுற பேருந்தில் ஏறுவது கடினமாக இருக்கிற மாதிரி. அதனால் தான் சில சமயங்களில் வெயிலில் திறந்து வைப்பார்கள் மாவு பாத்திரத்தை. அதனால் நுண்ணுயிர் வளர வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. இந்த வகை நுண்ணுயிர்கள் திறந்த வெளியில் வெப்பத்தில் உருவாகால் போகக்கூடியது. மேலும் மிளகாய், வேப்பிலை, உப்பு என கிருமி நாசினி களை உள்ளே போட்டு வைத்தாலும் அவைகள் அழிந்துவிடும். அதனால் வண்டு பிடிக்காது. இதை வீடுகளில் செய்வதை நாம் பார்த்து இருப்போம்.

எனவே காலம் காலமா கிருமிகள் நம்மோடு வாழ்ந்து வருகின்றன.

அதே நேரத்தில் இந்த உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் covid19 மாதிரி வைரசு கிருமிகள் உருவாகி மனித குலத்திற்கு பெரும் ஆபத்தாக போய்விடுகிறது. செல்கள் அற்ற, உயிரணுக்கள் அற்ற வைரஸ் கிருமிகள் எப்படிதான் உருவாகின்றன என்பது இன்று வரை அறிவியல் உலகம் ஒரு ஆச்சரியமாதான் பாக்குது.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply