Home>>இலக்கியம்>>தமிழ் வளர்க்க வாருங்கள் தமிழ் சான்றோர்களே
இங்கர்சால் நார்வே
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் வளர்க்க வாருங்கள் தமிழ் சான்றோர்களே

3 லட்சம் ஆங்கில சொல்லுக்கு தமிழ் சொல் இல்லை.

ஒரே ஆங்கில சொல்லுக்கு இணையாக மீண்டும் மீண்டும் புதிய புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்கள் உருவாக்கப்படாமல் இருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம். அப்படி தமிழ் சொல் இல்லாத ஆங்கிலச் சொல்லின் பட்டியல் யாரிடமும் பெரிதாக இல்லை. 4 லட்சம் ஆங்கில சொற்களின் கோப்பு ஒன்று கிடைத்தது அதனை நமது valluvarvallalarvattam.com இணையதளத்தில் சோதித்து தமிழ் பொருள் இல்லாத ஆங்கில சொற்களின் பட்டியலை உருவாக்கி விட்டோம். விடை உண்மையில் மிரட்டியது 4 லட்சம் சொல்லில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் சொற்களுக்கு தமிழ் சொல் இல்லை.

2 லட்சத்து 80 ஆயிரம் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உருவாக்க தமிழ் சொல் அறிஞர்களின் உதவி தேவை சொல்லை உருவாக்கும் திறமை உள்ள அனைவரின் உதவி தேவை.

சொற்களை பகுதி பகுதிகளாக பிரித்து கூகுள் வரித்தாளில் (Gsheet) பதிவேற்றுகிறேன் அதில் சொல் அறிஞர்கள் அவரவர் பெயர்களில் சொற்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்படும் சொற்கள் அவர்கள் பெயரில் வெளியிடப்படும்.

இதில் பங்கேற்க விரும்பும் சொல் அறிஞர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விருப்பம் தெரிவிக்கவும்.
ஈமெயில் ஐடி ingersol.norway@gmail.com

அல்லது “இங்கர்சால் நார்வே” என்ற முகப்புத்தக கணக்கின் மெசஞ்சரில் விருப்பம் தெரிவிக்கவும்
#ProjectTamilWords – தமிழ் தாயின் மடியில் மேலும் பல சொற்கள் பிரசவிக்க போகிறது அந்த முயற்சியை இன்று தொடங்குகிறோம்.

தமிழ் வளர்க்க வாருங்கள் தமிழ் சான்றோர்களே.


நன்றி
இவண் மின்னச்சன்
திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்

Leave a Reply