மாண்புமிகு முதல்வர் அவர்களே,
வணக்கம். இனியும் பொறுத்துக்கொள்ள இயலாது என்கிற அளவுக்கு தமிழக நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
[1] பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை உடனடியாக மாற்றுங்கள்!
[2] அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஆற்றுப்படுத்துனர்களை (counsellors) உடனடியாக நியமியுங்கள்.
[3] காவல்துறையில் காவிகள் ஊடுருவலை கண்டுபிடித்துக் களையெடுங்கள். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்ததுமே தமிழ்நாடு காவல்துறை தில்லிக்காரர்கள் கைகளுக்குள் போய்விட்டது. தூத்துக்குடி படுகொலை முதல் கள்ளக்குறிச்சி கலவரம் வரை சந்தேகங்கள் எழுகின்றன.
[4] சிந்தனைத்திறனும், செயலூக்கமும், மக்கள்நேயமும் கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் உங்களை எளிதாக சந்தித்து அளவளாவ வாய்ப்பளியுங்கள்.
[5] நிலைமை உங்கள் கட்டுக்குள் இல்லையோ என்கிற முணுமுணுப்புக்களும், எடப்பாடி அரசு இதைவிட நன்றாக இருந்ததோ என்கிற கூற்றுக்களும் ஆங்காங்கே பொதுவெளியில் ஒலிக்கின்றன.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்!
—
திரு. சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி.
நாகர்கோவில்,
யூலை, 26, 2022.