Home>>கலை>>புதிய படத்தை இயக்கும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” பட இயக்குனர்.
கலைதிரைத்துறை

புதிய படத்தை இயக்கும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” பட இயக்குனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ராஜா அவர்களுடன் இணை இயக்குனர் ஆக பல படங்களில் பணியாற்றிய ஆர். ராகேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இப்படத்தை Etcetera Entertainment சார்பில் V.மதியழகன் அவர்கள் தயாரிக்கிறார். படத்தில் பணிபுரியும் முக்கிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆர். ராகேஷ் அவர்கள் நல்ல வரவேற்பை பெற்ற “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” உட்பட மேலும் சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி சேகரிப்பு:
திரு. ஆனந்த ரெய்னா,
கற்பகநாதர்குளம்.

Leave a Reply